பூண்டில் அதிகப்படியான ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கின்றன. அதனால் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல் சரும பராமரிப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என மருத்துவர் பிரியங்கா குரி தெரிவித்துள்ளார். எனினும், தினசரி அதிகமாக பூண்டு உட்கொண்டால் நெஞ்செரிச்சல் போன்ற பக்கவிளைவுகள் உருவாகும்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Should garlic be consumed with or without the peel? Expert sheds light
பூண்டை தோல் உரிக்காமல் சாப்பிட வேண்டுமா?
"பூண்டில் அதிகப்படியான சத்துகள் இருக்கின்றன. இதில் அன்டிஆக்சிடென்ட், அலிசின் ஆகியவை இருக்கிறது. ஆனால் பூண்டில் தோல் செரிமானத்திற்கு கடினமானதாக இருக்கும்" என ஊட்டச்சத்து நிபுணர் விருத்தி ஸ்ரீவஸ்தவ் குறிப்பிட்டுள்ளார்.
பூண்டு தோல்களில் பூச்சிக்கொல்லிகளின் எச்சங்கள் இருக்கும். "வெங்காயத்தின் தோல்களில் எவ்விதமான ஊட்டச்சத்துகளும் இல்லாததை போன்று பூண்டு தோலிலும் சத்துகள் எதுவும் இல்லை. அவற்றை உரித்து பயன்படுத்துவது நல்லது" என்று ஸ்ரீவஸ்தவ் தெரிவித்துள்ளார்.
"ஆனால், பூண்டு தோல்களை குப்பையில் வீசாமல் அவற்றை இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து, அந்த தண்ணீரை தோட்டத்தில் இருக்கும் செடிகளுக்கு பயன்படுத்தலாம். அவை பூச்சிகளிடமிருந்து செடிகளை பாதுகாக்கும். செடிகளின் வளர்ச்சியும் சீராக இருக்கும்" என்று அவர் கூறியுள்ளார்.
பூண்டின் நன்மைகளை அதிகரிப்பது எப்படி?
"பூண்டில் அலிசின் இருக்கிறது. இது நுண்ணுயிர் மற்றும் அழற்சி ஆகியவற்றை தடுக்க உதவுகிறது. இது இரத்த நாளங்களை விரிவுபடுத்துகிறது. மேலும், ஆக்ஸிஜன் உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது. குறிப்பாக மாசுபட்ட நகரங்களில் வாழும் மக்கள், மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும் மலையேறுபவர்கள் ஆகியோருக்கு பூண்டு நிச்சயம் பயனளிக்கும். கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த பூண்டு உதவுகிறது. அதன்படி, பூண்டு தோலை உரித்து அவற்றை முறையாக சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும்" என்று ஸ்ரீவஸ்தவ் தெரிவித்துள்ளார்.