Expert shares Ayurvedic tips to manage pre diabetes
பிஸியான வேலை, ஆரோக்கியமற்ற உணவு முறைகள், உட்கார்ந்த வாழ்க்கை முறை, ஒழுங்கற்ற தூக்கப் பழக்கங்கள் மற்றும் பல’ வாழ்க்கை முறை நோய்களான டயாபடீஸ் மற்றும் ப்ரீ டயாபடீஸ் நோய்க்கு ஒரு முக்கிய காரணியாக ஆக்கியுள்ளது.
Advertisment
ப்ரீ டயாபடீஸ் நிலை என்பது இரத்தத்தில் சர்க்கரை அளவு இயல்பை விட அதிகமாக இருக்கும், ஆனால் நீரிழிவு என்று கருதப்படும் அளவுக்கு அதிகமாக இருக்காது.
ஆயுர்வேத நிபுணர் டிக்ஸா பவ்சர், "உங்கள் HbA1C (சராசரி இரத்த சர்க்கரை அளவு) 5.6 முதல் 6.5 வரை குறைந்தால், நீங்கள் ப்ரீ டயாபடீஸ் நிலையில் இருப்பதாக " பகிர்ந்து கொண்டார்.
ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில், நிபுணர் ஐந்து உதவிக்குறிப்புகளை பரிந்துரைத்தார், அது " ப்ரீ டயாபடீஸ்" நிலையை மாற்ற உதவும்.
Advertisment
Advertisements
ப்ரீ டயாபடீஸ் நிலையை மாற்றியமைப்பது, வாழ்நாள் முழுவதும் மாத்திரைகளை சாப்பிடுவதிலிருந்து உங்களைக் காப்பாற்றும், மற்றும் நோயற்ற வாழ்க்கையை வாழ உதவும்.
ப்ரீ டயாபட்டீஸ் அறிகுறிகள்
*அதிக தாகம்
* ஆற்றல் இல்லாமை
* அடிக்கடி சிறுநீர் கழித்தல்
* எதிர்பாராத எடை இழப்பு
* பசி அதிகரிக்கும்
*கால் அல்லது கைகளில் உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு போன்றவை
ப்ரீ டயாபடீஸ் நோயை நிர்வகிக்க ஆயுர்வேத குறிப்புகள்
*வெள்ளை சர்க்கரையை நிறுத்தி இயற்கை சர்க்கரைக்கு மாறவும்
உங்கள் உணவில் சுத்திகரிக்கப்பட்ட அல்லது வெள்ளை சர்க்கரையை தவிர்க்கவும்
பழங்கள், வெல்லம், தேன் போன்றவற்றில் இருந்து பெறப்படும் இயற்கை சர்க்கரையை அளவாக உட்கொள்ளலாம். இருப்பினும், வெள்ளை சர்க்கரையை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். "இது வெறும் கலோரிகள் மட்டுமே, உடலுக்கு எந்த ஊட்டச்சத்தையும் வழங்காது" என்று நிபுணர் கூறினார்.
*தினமும் உடற்பயிற்சி அல்லது யோகா பயிற்சி
உங்கள் அன்றாட வாழ்க்கையில் உடல் பயிற்சியை சேர்க்கவும்.
தினமும் மொத்தம் 40-60 நிமிடங்கள் யோகா அல்லது உடற்பயிற்சி செய்வது, நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். "உங்கள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதற்கும், கணையத்தின் உகந்த செயல்பாட்டிற்கும் சுறுசுறுப்பாக இருப்பது கட்டாயமாகும்" என்று நிபுணர் கூறினார்.
*நிஷா-அமல்கியை தினமும் உட்கொள்ளவும்
இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் ஆயுர்வேதக் கலவை, நெல்லிக்காய் பொடி மற்றும் மஞ்சளை சம அளவு கலந்து தயாரிக்கலாம்.
*முன்கூட்டியே இரவு உணவு சாப்பிடுங்கள்
"உகந்த கல்லீரல் நச்சுத்தன்மையை" எளிதாக்குவதால், தூங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன் சாப்பிடுவதை நிறுத்துங்கள். ஒவ்வொரு உணவிற்கும் இடையே, அதாவது காலை உணவு-மதியம்-இரவு உணவுக்கு இடையே 3 மணி நேரம் இடைவெளி வைத்துக்கொள்ளுங்கள்.
*போதுமான தூக்கம் வேண்டும்
உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், நாள்பட்ட வீக்கத்தைக் குறைக்கவும், உடல் மற்றும் மன அழுத்தத்தை நிர்வகிக்கவும், ஹார்மோன் பிரச்சனைகளை மேம்படுத்தவும் 7-8 மணிநேர தூக்கம் சிறந்த வழியாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “