பெண்கள் சரும பராமரிப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பர். முகப் பொழிவு, கூந்தல் பராமரிப்பிற்கு கூடுதல் நேரம் செலவிடுவர். இதற்காக பலவீத கிரீம், பவுடர் பயன்படுத்தப்படுத்துகின்றனர். இதில் சில சருமத்திற்கு ஒத்துப்போகாமல் பிம்பிள், எரிச்சல் போன்றவை ஏற்படுகிறது. குறைந்த விலை கிரீம், பவுடர்கள் சருமத்திற்கு கெடுதல் ஏற்படுத்துகிறது.
இவ்வாறு இல்லாமல் கிரீம், பவுடர்கள் பயன்படுத்தாமல் இயற்கையாக கிடைக்கின்ற பொருட்கள் கொண்டே சருமத்தை பராமரிக்கலாம் என சித்த மருத்துவ நிபுணர் முத்துக்குமரன் கூறுகிறார். அவர் கூறுகையில், முகம் பளப்பளப்பாக இருக்க தயிர் - அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன், பழச்சாறு - 1 ஸ்பூன், கேரட்சாறு - 1 ஸ்பூன், ரோஸ் வாட்டா - 1 ஸ்பூன், ஈஸ்ட் பவுடர் - அரை ஸ்பூன் இவற்றை எல்லாம் சேர்த்து குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் இருக்க வேண்டும். பின் முகத்தை கழுவ முகம் பளப்பளப்பாக இருக்கும்.
Tip 2
தயிர் ஏடு அல்லது பால் ஏடு எடுத்து கால் ஸ்பூன் மஞ்சள் கலந்து முகத்தில் பூசி நல்ல மசாஜ் செய்து வந்தால் முகத்தின் கருமை நீங்கி பளிச்சிடும். ரோஸ் வாட்டர் - 1 ஸ்பூன், கிளிசரின் - 1 ஸ்பூன், எலுமிச்சை சாறு, பழச்சாறு - 1 ஸ்பூன், தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் - 1 ஸ்பூன் எல்லாவற்றையும் நன்றாக கலக்கி முகத்தில் பூசி மசாஜ் செய்தால் முகம் பளபளப்பாகவும், கரும்புள்ளிகள் நீங்கும் என்கிறார்.
Tip 3
முகம் பளபளப்பாக இருக்க இரவு தூங்கும் முன்பு புதினாச் சாறு முகத்தில் பூசி, மறுநாள் காலையில் முகம் கழுவலாம். சிறிதளவு பால், காலி ஃபிளவர் சாறு - 1 ஸ்பூன், முள்ளங்கிச் சாறு - 1 ஸ்பூன் மூன்றையும் சேர்த்து முகத்தில் பூசி 10 நிமிடத்திற்கு பிறகு கழுவினால் முகம் பளப் பளப்பாகவும், கரும்புள்ளிகள் நீங்கும் என்று கூறுகிறார்.
ஆயில் ஸ்கின்
வெள்ளரிக் காயையும், கேரட்டையும் மிக்சியில் போட்டு அரைத்து அதை முகத்தில் தடவி வந்தால் எண்ணெய் வழியாமல் இருக்கும். முகத்தில் இருக்கும் புள்ளிகள் கரும் மச்சங்கள் மறைய ஆரம்பிக்கும்.
மென்மையான சருமம்
நல்ல பழுத்த வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதில் ரோஸ் வாட்டரை கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். அதை அப்படியே 1 அதை அப்படியே வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இது முகத்தில் இருக்கும் பருக்களை அகற்றி சருமத்தை மென்மையாக்கும்.
மருத்துவர் முத்துக்குமார்
சித்த மருத்துவ நிபுணர் மற்றும் ஆராய்ச்சியாளர்
தொடர்பு எண்: 9344186480
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“