உணவு சுகாதாரத்தை பராமரிப்பது என்பது உங்கள் சமையலறையை சுத்தமாக வைத்திருப்பதற்கு அப்பாற்பட்டது. கிச்சனில் கரப்பான்பூச்சிகள் இல்லாமல் இருப்பதை இது குறிக்கிறது. இதற்கு சாதாரண துடைப்பம் போதுமானதாக இருக்காது. இவை, நம் கண்களுக்கு தெரியாத பகுதிகளில் இருந்து எளிதாக வந்து விடும்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: 4 expert tips to keep cockroaches out of your kitchen drawers
இந்த சூழலில், கிச்சனில் கரப்பான்பூச்சிகள் தொல்லையை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று டிஜிட்டல் கிரியேட்டர் தீப்தி கபூர் தெரிவித்துள்ளார். இதற்கான சில சிம்பிள் டிப்ஸ்களை அந்த வீடியோவில் தீப்தி கபூர் பகிர்ந்து கொண்டார்.
இது தொடர்பான சில தகவல்களை பெற பிரபல சமையற்கலைஞர் அனன்யா பானர்ஜியை indianexpress.com தொடர்பு கொண்டது. "கரப்பான்பூச்சிகளால் கெட்டுப்போன உணவுகளை சாப்பிட்டால் பல்வேறு வயிற்று உபாதைகள் வரும். குறிப்பாக, செரிமான கோளாறு மற்றும் கடுமையான தொற்றுகள் ஏற்படும். இதனை தடுக்க கிச்சனை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
1. கிச்சனை தூய்மையாக பராமரிக்கவும்:
வினிகர் மற்றும் தண்ணீரை சம அளவாக கலந்து கிச்சனின் டைல்ஸ் மற்றும் அலமாரி பகுதிகளில் நன்றாக துடைக்க வேண்டும். இவை உணவின் மிச்சம் மற்றும் அதன் வாசத்தை அகற்ற உதவுகிறது. உணவு பொருட்களை டப்பாவில் அடைத்து மூடி வைத்து பயன்படுத்தவும்.
2. கரப்பான்பூச்சிகளை விரட்ட இயற்கையான பொருட்களை பயன்படுத்தவும்:
கிச்சன் அலமாரிகளில் வேப்பிலைகள் வைக்கும் பழக்கத்தை பின்பற்றலாம். மேலும், வேப்பெண்ணெய்யுடன் தண்ணீர் கலந்து கிச்சனின் கரப்பான்பூச்சிகள் இருக்கும் இடங்களில் ஸ்ப்ரே செய்யலாம். இது மட்டுமின்றி கிராம்பு மற்றும் இலவங்கப்பட்டை ஆகியவற்றையும் இதற்காக பயன்படுத்தலாம்.
3. கரப்பான்பூச்சிகள் வரும் வழியை அடைக்கவும்:
கிச்சனில் எந்தப் பகுதி வழியாக கரப்பான்பூச்சிகள் வருகிறது என்று முதலில் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதன் பின்னர், அந்த வழிகளை கூடுமானவரை அடைத்து வைக்கவும்.
4. பொறிகள் மற்றும் தடுப்புகளை அமைக்கவும்:
தற்போது கரப்பான்பூச்சிகளை பிடிப்பதற்காக பொறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றையும் வாங்கி பயன்படுத்தலாம்.
முன்னதாக, மாஸ்டர் செஃப் பங்கஜ் பதூரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்த தொல்லை தரும் கரப்பான்பூச்சிகளை விரட்ட பல குறிப்புகளைப் பகிர்ந்து கொண்டார்.