ரத்த சர்க்கரை அளவை 10 புள்ளிகள் குறைப்பது எப்படி? நிபுணர்கள் கூறுவது என்ன?

உங்கள் உணவு முறையில் மாற்றங்களைச் செய்வதற்கு முன் எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

உங்கள் உணவு முறையில் மாற்றங்களைச் செய்வதற்கு முன் எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
blood glucose getty

இங்கே நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டியவை (புகைப்படம்: கெட்டி இமேஜஸ்/திங்க்ஸ்டாக்)

நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க, நிபுணர்களால் அங்கீகரிக்கப்பட்ட, எளிதில் பின்பற்றக்கூடிய சுகாதார நடவடிக்கைகளை நாம் எப்போதும் நாடுகிறோம். ரத்த சர்க்கரை ஒரு சூடான விவாதப் பொருளாகத் தொடர்வதால், இரத்த சர்க்கரை அளவை குறைந்தபட்சம் 10 புள்ளிகள் திறம்பட குறைப்பது எப்படி என்று மருத்துவர்களிடம் கேட்க முடிவு செய்தோம். கட்டுப்படுத்தப்படாத ரத்த சர்க்கரை அளவுகள் பக்கவாதம், இதயம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

ஆங்கிலத்தில் படிக்க:

Advertisment

நல்ல செய்தி: ரத்த சர்க்கரையை 10 புள்ளிகள் குறைப்பது எளிய நடவடிக்கைகளால் சாத்தியமாகும். உதாரணமாக, உணவுக்குப் பிறகு உங்கள் ரத்த சர்க்கரை 180 மி.கி./டெ.லி ஆக இருந்து, அதை 170 மி.கி./டெ.லி ஆகக் குறைத்தால், அந்த 10 புள்ளி குறைவு சிறியதாக இருந்தாலும் சிக்கல்களைத் தடுப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.

மும்பையின் பரேலில் உள்ள கிளேநெகிள்ஸ் மருத்துவமனையின் உள் மருத்துவப் பிரிவின் மூத்த ஆலோசகர் டாக்டர் மஞ்சுஷா அகர்வால், சுமார் 20 நிமிடங்கள் வேகமாக நடப்பது அல்லது உங்களை அமைதிப்படுத்தவும், மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை விடுவிக்கவும், உடல் இன்சுலினை திறம்பட பயன்படுத்தவும் உதவும் எந்தவொரு உடல் செயல்பாடுகளையும் பரிந்துரைத்தார். “மேலும், ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது ரத்த ஓட்டத்தில் இருந்து அதிகப்படியான சர்க்கரையை வெளியேற்றவும் உதவுகிறது. இனிப்பு தின்பண்டங்கள் அல்லது பானங்களைத் தவிர்த்து, அதற்கு பதிலாக ஒரு சில கொட்டைகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த, குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட சிற்றுண்டியைத் தேர்ந்தெடுப்பது உங்கள் ரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவும்” என்று டாக்டர் அகர்வால் கூறினார்.

பச்சை காய்கறிகள், கொட்டைகள் மற்றும் விதைகள் போன்ற குறைந்த கிளைசெமிக்-குறியீட்டு உணவுகளில் கவனம் செலுத்துங்கள். இவை மெதுவாக ஜீரணிக்கப்பட்டு இரத்த சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்கச் செய்யாது என்று டெல்லியில் உள்ள CK பிர்லா மருத்துவமனையின் உள் மருத்துவப் பிரிவின் இயக்குநர் டாக்டர் மனிஷா அரோரா கூறினார்.

Advertisment
Advertisements

ஆழ்ந்த சுவாசம் அல்லது லேசான ஸ்ட்ரெட்சிங் உடற்பயிற்சிகள் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிற மன அழுத்த ஹார்மோன்களைக் குறைக்க உதவும். “நீங்கள் நீரிழிவு மருந்து எடுத்துக் கொண்டால், பரிந்துரைக்கப்பட்டபடி எடுத்துக்கொள்ளுங்கள் மற்றும் அளவுகளைத் தவறவிடாதீர்கள். மாற்றங்களைக் கண்காணிக்க உங்கள் அளவுகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்” என்று டாக்டர் அகர்வால் கூறினார்.

ஹைதராபாத், எல்.பி. நகரில் உள்ள கிளேநிகிள்ஸ் அவேர் மருத்துவமனையின் பொது மருத்துவ ஆலோசகர் டாக்டர் ஸ்ரீனிவாஸ் சாரி ஏ, உங்கள் ரத்த சர்க்கரையை 10 புள்ளிகள் குறைப்பது பெரும்பாலும் எளிய, இலக்கு வைக்கப்பட்ட செயல்களால் அடையப்படலாம், குறிப்பாக நீங்கள் குறுகிய கால கட்டுப்பாட்டைத் தேடுகிறீர்கள் என்றால் எளிதாகக் குறைக்கலாம் என்றார்.

fasting 1600 getty
விரதம் இருத்தல்: உணவைத் தவிர்க்க வேண்டாம். Photograph: (புகைப்படம்: கெட்டி இமேஜஸ்/திங்க்ஸ்டாக்)

மருத்துவ ரீதியாக, டாக்டர் சாரி சில நடைமுறை, ஆதார அடிப்படையிலான முறைகளை பட்டியலிட்டார்:

10-15 நிமிட நடைபயிற்சி: உணவுக்குப் பிறகு லேசானது முதல் மிதமான செயல்பாடுகளைச் செய்வது தசை செல்களை ஆற்றலுக்காக குளுக்கோஸைப் பயன்படுத்தத் தூண்டுகிறது, இது ரத்த சர்க்கரை அளவை திறம்பட குறைக்கிறது. பூப்பந்து அல்லது பேடல் போன்ற விளையாட்டு நடவடிக்கைகளைத் தொடர்ந்து தேர்ந்தெடுப்பதன் முக்கியத்துவத்தையும் டாக்டர் அரோரா வலியுறுத்தினார்.

நீரேற்றம்: நீரிழப்பு குளுக்கோஸ் செறிவை அதிகரிக்கலாம். ஒன்று அல்லது இரண்டு கிளாஸ் தண்ணீர் குடிப்பது சிறுநீரகம் வழியாக அதிகப்படியான சர்க்கரையை வெளியேற்றுவதன் மூலம் சிறுநீரக செயல்பாட்டை ஆதரிக்கிறது.

ஆழ்ந்த சுவாசப் பயிற்சி: மன அழுத்தம் கார்டிசோல் வெளியீட்டைத் தூண்டுகிறது, இது இரத்த சர்க்கரையை அதிகரிக்கலாம். சில நிமிடங்கள் கவனத்துடன் சுவாசிப்பது அல்லது தியானம் செய்வது மன அழுத்தம் மற்றும் குளுக்கோஸ் அளவைக் குறைக்க உதவும்.

சிறிய அளவில், சத்தான புரத அடிப்படையிலான சிற்றுண்டி சாப்பிடுங்கள்: உங்கள் அளவுகள் அதிகரித்துக்கொண்டிருந்தால், ஆனால் நீங்கள் சிறிது நேரம் சாப்பிடவில்லை என்றால், ஒரு சிறிய புரத அடிப்படையிலான சிற்றுண்டி (வேகவைத்த முட்டை அல்லது ஒரு சில பாதாம் போன்றவை) குளுக்கோஸ் உறிஞ்சுதலை மெதுவாக்குவதன் மூலம் ரத்த சர்க்கரையை சமப்படுத்த உதவும்.

பகுதி அளவாகக் கட்டுப்படுத்துங்கள்: டாக்டர் அரோரா ஒரு முழு கிண்ணம் அல்லது தட்டை இரண்டாவது அல்லது மூன்றாவது முறை பரிமாறாமல் சாப்பிட பரிந்துரைக்கிறார்.

மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துங்கள்: மந்திரம் உச்சரிப்பது, நேர்மறையாக இருப்பது, பொழுதுபோக்கு நடவடிக்கைகள், ஒரு சமூக வட்டத்தை உருவாக்குவது, ஜிம்முக்குச் செல்வது போன்றவற்றால் மன அழுத்த அளவுகளை நிர்வகிக்க முடியும்.  
“உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கும் வழியைக் கண்டறியுங்கள்" என்று டாக்டர் அகர்வால் கூறினார்.

இந்தச் சிறிய மாற்றங்கள் தற்காலிகமாக சர்க்கரை அளவைக் குறைக்கலாம் என்றாலும், ஒரு சீரான உணவு, தினசரி உடற்பயிற்சி மற்றும் வழக்கமான பரிசோதனைகள் போன்ற நீண்ட கால உத்திகள் சரியான நேரத்தில் மேலாண்மைக்கு அவசியம் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.  “எனவே, உத்திகளைப் பின்பற்றி உயர் ரத்த சர்க்கரை அளவுகளை நிர்வகிக்கவும்” என்று டாக்டர் அகர்வால் கூறினார்.

இந்த நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சைக்கு மாற்றாக இல்லை. ஆனால், குறுகிய கால தலையீடுகளாக பாதுகாப்பாகப் பயன்படுத்தப்படலாம். உங்கள் நீரிழிவு மேலாண்மை திட்டத்தில் மாற்றங்களைச் செய்வதற்கு முன் எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.

பொறுப்புத் துறப்பு: இந்த கட்டுரை பொதுத் தகவல்கள் மற்றும்/அல்லது நாங்கள் பேசிய நிபுணர்களின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. எந்தவொரு வழக்கத்தையும் தொடங்குவதற்கு முன் எப்போதும் உங்கள் சுகாதார நிபுணரை அணுகவும்.

Diabetes

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: