சிறுநீர் கழித்த பிறகு ஏற்படும் எரிச்சலை நாம் வீட்டில் செய்யும் இந்த தண்ணீர் குடித்தால் நீங்கும் என்று கூறப்படுகிறது. கொத்தமல்லி தண்ணீருக்கும் இந்த குணம் இருப்பதாக கூறப்படுகிறது.
நாம் அதிகம் தண்ணீர் குடிக்காமல் இருந்தாலோ அல்லது வெயில் அதிகம் இருந்தாலோ அல்லது பொது கழிப்பிடத்தை பயன்படுத்தும்போது சிறுநீர் கழித்த பிறகு எரிச்சல் உண்டாகும். இதற்கு நாம் மாத்திரைகளும் எடுத்துகொள்ளலாம்.
இந்நிலையில் இதற்கு வீட்டிலும் தீர்வு காண முடியும். இரவில் நாம் 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லியை விதைகளை நாம் 1 ½ கப் தண்ணீரில் சேர்த்து அப்படியே விட்டுவிட வேண்டும்.
தொடர்ந்து இதை வடிகட்டி நாம் அடுத்த நாள் குடிக்க வேண்டும். இந்நிலையில் இது சிறுநீர் வழித் தடத்தில் உள்ள தொற்றுகளை குணப்படுத்தும். குறிப்பாக சிறுநீர் கழித்த பின்பு வரும் எரிச்சலை குணமாக்கும்.
இது சிறுநீர் வழி தடத்தில் உள்ள வீக்கம், அசௌகரியத்தை நீக்குகிறது. மேலும் இது நிறுநீர் தொகுதியில் உள்ள நஞ்சுகளை வெளியேற்றுகிறது. மேலும் கொத்தமல்லியில் உள்ள தன்மை இது பேக்ட்ரீயா மற்றும் பல தொற்றுகளை வராமல் தடுக்கும்.
மேலும் உங்களுக்கு சிறுநீர் வழி தடத்தில் தொற்று ஏற்பட்டால் நீங்கள் முதலில் மருத்துவரைதான் பார்க்க வேண்டும். இது ஒரு கூடுதலாக உதவும் நிவாரணம் மட்டுமே.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“