தனிப்பட்ட பதில்கள் மாறுபடலாம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பிடத்தக்க உணவுமுறை மாற்றங்களைச் செய்வதற்கு முன் மருத்துவ நிபுணருடன் கலந்தாலோசிப்பது தனிப்பட்ட வழிகாட்டுதலுக்கு அறிவுறுத்தப்படுகிறது என்று ஹைதராபாத் யசோதா மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் மருத்துவர் டாக்டர் திலீப் குடே கூறினார்.
ஆங்கிலத்தில் படிக்க: 6 homemade beverages to lose belly fat
எந்த பானமும் வயிற்றுக் கொழுப்பை மாயாஜாலம் செய்து கரைக்க முடியாது என்றாலும், வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய சில பானங்களை சீரான உணவு மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கைமுறையில் சேர்த்துக்கொள்வது உங்கள் ஒட்டுமொத்த எடைக் குறைப்பு இலக்குகளுக்கு உதவலாம். ஹைதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் மருத்துவர் டாக்டர் திலீப் குடே கூறுகையில், “வீட்டில் தயாரிக்கப்பட்ட பானங்கள் உங்கள் வயிற்றுப் பகுதி கொழுப்பைக் குறைப்பதற்கு உறுதுணையாக இருக்கும்.” என்று கூறினார்.
உணவியல் நிபுணர் ஷிகா குமாரியின் கருத்துப்படி, வீட்டிலேயேதயாரிக்கக் கூடிய 6 பானங்கள் பெரும்பாலும் ஆரோக்கிய நன்மைகளுடன் தொடர்புடையவை, கொழுப்பைக் குறைக்க பங்களிக்கக்கூடும் என்று கூறுகிறார்.
அவை என்ன என்பது குறித்து அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இஞ்சி டீ
இஞ்சி டீ-யில் அழற்சி எதிர்ப்பு மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் பண்புகளைக் கொண்ட கலவைகள் உள்ளன. “இஞ்சி தேநீர், அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகளுடன், கலோரிகளை எரிப்பதை மேம்படுத்துகிறது, செரிமானத்திற்கு உதவுகிறது, இது தொப்பை கொழுப்பைக் குறைக்கும்” என்று டாக்டர் குடே கூறினார்.
சோற்றுக் கற்றாழை ஜூஸ்
சோற்றுக் கற்றாழை செரிமான நன்மைகளைக் கொண்டிருக்கிறது, ஆனால், அதன் ஆற்றல் காரணமாக மிதமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது முக்கியம் என்று குமாரி கூறினார்.
வெள்ளரி புதினா தண்ணீர்
வெள்ளரி மற்றும் புதினா கலந்த தண்ணீரில் சர்க்கரை சேர்க்கக் கூடாது. இந்த தண்ணீர் நீர்ச் சத்து அதிகரிப்பு மற்றும் புத்துணர்ச்சி அளிக்கிறது என்று டாக்டர் குடே குறிப்பிட்டார். “வெள்ளரிக்காய் மற்றும் புதினா கலந்த தண்ணீர் புத்துணர்ச்சியூட்டும், குறைந்த கலோரி நீரேற்ற விருப்பத்தை வழங்குகிறது, இது நிறைவடைந்த உணர்வை ஊக்குவிக்கிறது.” என்று டாக்டர் குடே கூறினார்.
ஆப்பிள் சைடர் வினிகர் (ஏ.சி.வி) பானம்
ஆப்பிள் சைடர் வினிகர் பானத்தை தண்ணீரில் கலந்து உணவுக்கு முன் உட்கொள்ளவும். குமாரியின் கருத்துப்படி, இந்த பானம் சில ஆய்வுகள் உடல் கொழுப்பைக் குறைக்க உதவும் என்று கூறுகின்றன. டாக்டர் குடேவும் ஒப்புக்கொண்டு இதை பகிர்ந்து கொண்டார், “ஆப்பிள் சைடர் வினிகரை (ஏசிவி), தண்ணீரில் கலந்து குடிக்கும்போது பசியைக் குறைக்கும் மற்றும் கலோரி உட்கொள்ளலைக் கட்டுப்படுத்தும் என நம்பப்படுகிறது” என்று டாக்டர் குடே குறிப்பிட்டார்.
இலவங்கப்பட்டை தேநீர்
இலவங்கப்பட்டை ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது, பசியைக் குறைக்கும் என்று குமாரி குறிப்பிட்டார்.
பெருஞ்சீரகம் கலந்து குடித்தல்
பெருஞ்சீரகம் உடலில் இருந்து சிறுநீரை வெளியேற்றும் பண்புகளைக் கொண்டது. செரிமானத்துக்கு உதவும் இந்த பெருஞ்சீரகத் தேநீரை வீட்டிலேயே தயாரிக்கலாம்.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த க்ரீன் டீயில் கேடசின்கள் உள்ளன. அவை வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். காலப்போக்கில் கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன என்றும் டாக்டர் குடே குறிப்பிட்டார். “குறைந்த கலோரி உள்ளடக்கம் மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றிற்கு பெயர் பெற்ற எலுமிச்சை தண்ணீர், செரிமானம் மற்றும் கிக்ஸ்டார்ட் வளர்சிதை மாற்றத்தை ஆதரிக்கும், ஆரோக்கியமான வயிற்றுக்கு பங்களிக்கிறது” என்று டாக்டர் குடே கூறினார்.
இந்த பானங்கள் நன்மை பயக்கும் அதே வேளையில், அவை சீரான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சியை உள்ளடக்கிய ஒரு விரிவான அணுகுமுறையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்றும் டாக்டர் குடே கூறினார். " “தனிப்பட்ட பதில்கள் மாறுபடலாம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பிடத்தக்க உணவுமுறை மாற்றங்களைச் செய்வதற்கு முன் ஒரு மருத்துவ நிபுணருடன் கலந்தாலோசிப்பது தனிப்பட்ட முறையில் அறிவுறுத்தப்படுகிறது” என்று டாக்டர் குடே கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.