அன்றாட வாழ்க்கையில் சமூகவலைதளம் முக்கிய பங்கு வகிக்கிறது. சமூகவலைதளம் பொழுதுபோக்காக இல்லாமல் சிலருக்கு தொழிலாக மாறியுள்ளது. யூட்யூப் வீடியோ மூலம் பணம் சம்பாதிக்கின்றனர். அதுபோல், இளைஞர்களுக்கு பிடித்தமான தளமாக இன்ஸ்டாகிராம் உள்ளது. சாமானியர்கள் முதல் பிரபலங்கள் வரை இன்ஸ்டாகிராம் பயனாளர்களாக உள்ளனர். அதில், பிரபலங்கள் அவர்களைப் பற்றின அப்டேட்களை ரசிகர்களுக்கு கொடுக்கின்றனர். இந்த இன்ஸ்டாகிராமில் மேலும் ஒரு சுவாரஸ்யமாக ரீல்ஸ் வசதி உள்ளது. அதில் வரும் பாடல், சினிமா வசனத்திற்கு ஏற்ப நடித்தும், நடனமாடியும் ரீல்ஸ் பதிவிடுகின்றனர். இது பயனாளர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இன்ஸ்டாகிராமிலிருந்து இந்த ரீல்ஸை டவுன்லோட் செய்து பயன்படுத்துகின்றனர்.
அந்தவகையில், ஆண்ட்ராய்டு மொபைல் வைத்திருப்பவர்கள் ரீல்ஸ் டவுன்லோட் செய்வதற்காக மூன்றாம் தரப்பு செயலிகளை டவுன்லோட் செய்து பயன்படுத்துகின்றனர். அப்போது, உங்கள் இன்ஸ்டா கணக்கு ஐடி, பாஸ்வேர்ட் பயன்படுத்தி இன்ஸ்டாகிராமிற்குள் சென்று பிடித்தமான ரீல்ஸ் டவுன்லோட் செய்வீர்கள். இதற்கு மாற்றாக மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்துவதற்கு பதிலாக இன்ஸ்டாவிற்குள் நுழையாமல் பாதுகாப்பாக ரீல்ஸ் டவுன்லோட் செய்யலாம். ஐகிராம் (iGram – website) இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைனில் ரீல்ஸ் டவுன்லோட் செய்யலாம்.
- டவுன்லோட் செய்யவேண்டிய ரீல்ஸை தேர்ந்தெடுக்க வேண்டும்
உங்களுக்கு பிடித்தமான ரீல்ஸை ஆன்லைனில் தேடி எடுத்து, அதன் லிங்கை காபி செய்து கொள்ள வேண்டும். லிங்க் காபி செய்ய, ரீல்ஸ் வீடியோ கீழே ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். அதற்குள் சென்று காபி லிங்க என கொடுக்க வேண்டும்.
- ஐகிராம் இணையதளம்
ஆன்லைன் ரீல்ஸ் டவுன்லோடிங் இணைதளமான ஐகிராமிற்கு சென்று, காபி செய்ய லிங்கை பதிவிட வேண்டும். ஐகிராம் இணையதளத்தை ஃபோன், கம்யூட்டரில் பயன்படுத்தலாம்.
- ரீல்ஸ் டவுன்லோட்
காபி செய்ய லிங்கை ஐகிராமில் பதிவிட்ட பின், ‘டவுன்லோட்’ என்ற ஆப்ஷன் அருகில் கொடுக்கப்பட்டிருக்கும், அதில் ‘டவுன்லோட்MP4’ (Download mp4) எனக் கொடுத்து ரீல்ஸ் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil