கண்ணில் தூசி விழுந்தால் உடனே தேய்க்க கூடாது… இப்படி செய்தால் ஈஸியா எடுக்கலாம்; டாக்டர் கார்த்திகேயன்

இந்த வீடியோவில், கண்களில் தூசி விழுந்தால் அதை எவ்வாறு பாதுகாப்பாக அகற்றுவது என்பதைப் பற்றி விரிவாக பேசுகிறார் டாக்டர் கார்த்திகேயன்.

இந்த வீடியோவில், கண்களில் தூசி விழுந்தால் அதை எவ்வாறு பாதுகாப்பாக அகற்றுவது என்பதைப் பற்றி விரிவாக பேசுகிறார் டாக்டர் கார்த்திகேயன்.

author-image
WebDesk
New Update
Eye dust Cleaing Tips

Eye dust Cleaing Tips

கண்களில் தூசி விழுவது என்பது அன்றாட வாழ்வில் ஏற்படும் ஒரு பொதுவான நிகழ்வு. ஆனால், அதை சரியாக கையாளத் தவறினால், அது கண்களுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

Advertisment

இந்த வீடியோவில், கண்களில் தூசி விழுந்தால் அதை எவ்வாறு பாதுகாப்பாக அகற்றுவது என்பதைப் பற்றி விரிவாக பேசுகிறார் டாக்டர் கார்த்திகேயன்.

நம் கண்கள் மிகவும் மென்மையானவை. கண்ணின் கருவிழியின் மேலடுக்கான கார்னியா மிகவும் மெல்லிய அடுக்கு. இந்த கார்னியா பாதிக்கப்படாமல் இருப்பது மிக முக்கியம். கண்ணின் வெள்ளைப்பகுதிக்கு இருபுறமும் இருக்கும் கன்ஜக்டிவா எனப்படும் சவ்வு, இமைகளின் உள்பகுதியிலும் படர்ந்துள்ளது. தூசி இந்த பகுதிகளில் எங்கு வேண்டுமானாலும் படியலாம்.

கவனிக்க வேண்டியது

ஏதேனும் ஒரு பொருள் வெடித்துச் சிதறி அதன் துண்டுகள் கண்ணில் விழுந்தால், அதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அத்தகைய துண்டுகள் பெரும்பாலும் கண்ணின் கார்னியாவைத் துளைத்து கண்ணுக்குள் செல்ல வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால், அது மருத்துவ அவசரநிலை. உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

Advertisment
Advertisements

காற்றில் பறக்கும் சிறிய தூசுகள், மண் துகள்கள் போன்றவற்றை நீங்களாகவே அகற்றலாம். அதற்கு சில வழிமுறைகள் இங்கே:

1. கைகளை சுத்தப்படுத்துதல்

கண்களில் தூசி விழுந்தவுடன் நாம் செய்யும் முதல் விஷயம், அதைத் தேய்ப்பதுதான். ஆனால், அது தவறு. கண்களைத் தொடுவதற்கு முன், கைகளை சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும். கிருமிகள் நிறைந்த கைகளால் கண்களைத் தொட்டால், தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் தனியாக இல்லாமலும், வேறு யாராவது உங்களுக்கு உதவ வந்தாலும் அவர்களும் தங்கள் கைகளைச் சுத்தம் செய்ய வேண்டும்.

2. கண்ணை சிமிட்டுதல்

கண்களைத் தேய்ப்பதற்குப் பதிலாக, வேகமாக சிமிட்ட வேண்டும். இது சற்று அசௌகரியமாக இருந்தாலும், கண்ணை வேகமாக சிமிட்டுவதன் மூலம் தூசி வெளியேற வாய்ப்புள்ளது. நமது கண்கள் இயற்கையாகவே, விழும் தூசுகளை வெளியேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கண்களைத் தேய்த்தால், கார்னியாவில் புண் ஏற்பட வாய்ப்புள்ளது. இது கண்ணுக்குள் சென்றால் பெரிய பிரச்சனைகளை உருவாக்கும்.

3. தூசியைக் கண்டறிதல்

eye

தூசி எங்குள்ளது என்பதைக் கண்டறிவது அடுத்த முக்கியமான படி.

உதவி இருந்தால்: யாராவது உங்களுக்கு உதவி செய்யும்போது, ஒரு சிறிய கண்ணாடி லென்ஸைப் (பொதுவாக கடைகளில் கிடைக்கும்) பயன்படுத்தி கண்ணைப் பெரிதாக்கிப் பார்க்கலாம். இது தூசியைக் கண்டறிய உதவும்.

தனியாக இருந்தால்: தனியாக இருக்கும்போது பதட்டப்படாமல், அமைதியாக இருக்க வேண்டும். பதட்டப்பட்டால் கண்ணில் இருந்து நீர் வழிய ஆரம்பித்து, தூசியைக் கண்டறிவது கடினமாகிவிடும். காண்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள், இந்த நேரத்தில் லென்ஸைக் கழற்றுவதில் கவனமாக இருக்க வேண்டும்.

ஒரு சிறிய கையடக்கக் கண்ணாடியை எடுத்துக்கொண்டு, முதலில் கண்ணின் அனைத்துப் பகுதிகளையும் (இடது, வலது, மேல், கீழ்) கவனமாகப் பார்க்கவும்.

வெள்ளைப்பகுதியான கன்ஜக்டிவாவில் தூசி இல்லாவிட்டால், மேல் இமையை மெதுவாகத் தூக்கி அதன் உள்பகுதியில் பார்க்கவும்.

அங்கும் இல்லையென்றால், கீழ் இமையை இழுத்து அதன் உள்பகுதியில் உள்ளதா எனப் பார்க்கவும்.

தூசியைக் கண்டறிந்தவுடன் அதை எவ்வாறு அகற்றுவது?

இயர் பட்: பொதுவாகக் காதுக்கு பயன்படுத்தப்படும் இயர் பட் (Ear Bud) தூசியை அகற்ற உதவும். இயர் பட்டை கவனமாகப் பயன்படுத்தி, கண்ணின் மேற்பரப்பில் உள்ள தூசியை மெதுவாக அகற்றலாம். இது கண்ணுக்குள் அழுத்திவிடாமல் மெதுவாக, கவனமாகச் செய்ய வேண்டும்.

இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் பெரும்பாலான நேரங்களில் கண்ணில் உள்ள தூசியை பாதுகாப்பாக அகற்ற முடியும். இருப்பினும், ஏதேனும் அசாதாரண வலி, சிவத்தல், பார்வைக் குறைபாடு அல்லது தூசி வெளியேறவில்லை என்றால், உடனடியாக ஒரு கண் மருத்துவரை அணுகுவது அவசியம்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: