இன்றைய சூழலில் கண்பார்வை குறைதல் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவருக்கும் உள்ள ஒரு பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. ஆனால் இதனை பயிற்சிகள் மூலம் சரிசெய்யலாம் என்று டாக்டர் கார்த்திகேயன் தனது யூடியூப் பக்கத்தில் கூறுகிறார்.
கண்பார்வை தெளிவுபெற அவர் ஒருசில பயிற்சிகளை பரிந்துரைக்கிறார். அவற்றை பார்ப்போம்.
1. கைகளை தேய்த்து சூடாக்கி உள்ளங்கையை கண்கள் மேல் வைக்கவும். சூடாக்கி சூடாக்கி ஒரு 10 முதல் 15 முறை வைக்கலாம்.
2. கண்களை சிமிட்டுதல் - தொடர்ந்து 10 முறை சிமிட்டவும். அதேமாதிரி கண்களை 10 நிமிடம் இறுக்கி மூடவும்.
3. ஒரு பேனாவை நீட்டி அதன் மேல் எழுதிய ஒரு எழுத்தை உற்று நோக்கி பேனாவை கண்கள் பக்கமாக்எடுத்து செல்லவும். பேனா இரண்டாக தெரியும்போது அதை பின்னோக்கி இழுக்கவும். இதேமாதிரி 10 முறை செய்ய வேண்டும்.
4. ஒரு பொருளை கையில் வைத்து 15 நிமிடம் உத்து பார்க்கவும்.
கண் பார்வை தெளிவு பெற டெய்லி இந்த 8 பயிற்சி பண்ணுங்க | 8 eye exercises to improve vision
5. கண்ணிலேயே 8 போட வேண்டும். சுவற்றில் 8 போட்டு அசைவு கொடுக்கலாம்.
6. 20 நிமிடம் கம்பியூட்டர் பார்த்தால் அடுத்த 20 நிமிடம் வேறு எதாவது ஒன்றை பார்க்க வேண்டும்.
7. கண் பயிற்சிக்கு உள்ள கயிறை வாங்கி அதில் உள்ள பந்துகளை கையில் பிடித்து உற்றுநோக்கவும்.
8. வீட்டின் மேல் பார்த்து கண்களை ஆண்டிக்ளாக் வடிவில் சுற்றவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.