நம்மில் பெரும்பாலோர் நமது நாளின் பாதிக்கு மேல் லேப்டாப் அல்லது மொபைல் போன்களில் செலவிடுகிறோம். இது இயற்கையாகவே நம் கண்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
மேலும் ஏர் கண்டிஷனிங் அல்லது பிற சுற்றுச்சூழல் காரணிகளுக்கு நீண்டகால வெளிப்பாடு காரணமாக பல நபர்கள் அசௌகரியம், எரிச்சல் மற்றும் பார்வைக் குறைபாட்டை அனுபவிக்கின்றனர்.
கன்டென்ட் கிரியேட்டர் ஆலன் மாண்டல் வறண்ட கண் நோய்க்குறிக்கு (dry eye syndrome) ஒரு எளிய தீர்வைப் பரிந்துரைக்கிறார்.
ஒரு நிமிடம் கண்களை சிமிட்டுதல்.
"நாம் நீண்ட மணிநேரம் நமது டிஜிட்டல் ஸ்கிரீன் அல்லது வறண்ட சூழலில் வெறித்துப் பார்க்கும்போது குறைவாக கண் சிமிட்டுகிறோம், இது வறண்ட, எரிச்சலூட்டும் கண்களுக்கு வழிவகுக்கும்.
கண் சிமிட்டும் பயிற்சிகளை கவனமாகப் பயிற்சி செய்வதன் மூலம், நம் கண்களை உயவூட்டுவதற்குத் தேவையான, மேல் மற்றும் கீழ் கண் இமைகளில் உள்ள சிறிய எண்ணெய் உற்பத்தி செய்யும் மெய்போமியன் சுரப்பிகள் (meibomian glands) திறக்கப்படும்.
மேலும் இந்த எளிய சிமிட்டல் செயல், நம் கண்களின் மேற்பரப்பில் கண்ணீரை சமமாக பரப்ப உதவுகிறது, வறட்சி மற்றும் அசௌகரியத்தை தடுக்கிறது”, என்று மண்டெல் கூறுகிறார்.
உங்கள் தினசரி வழக்கத்தில் விரைவான கண் சிமிட்டும் பயிற்சியை இணைத்துக் கொள்ளுங்கள்.
சில நொடிகள் கண்களை மெதுவாக மூடவும். பிறகு கண்களை அகலமாக திறந்து நன்கு விரிந்து பார்க்கவும். இப்போது வேகமாக சிமிட்டவும். கண் சிமிட்டத் தொடங்குவது, உங்கள் கண்களை நன்கு உயவூட்டுவதற்கு கண்ணீர் உற்பத்தியைத் தூண்டுகிறது. இது ஒரு சிறந்த நாளாக அமைய உதவும் என்று நம்புகிறேன், என்று அவர் கூறுகிறார்.
ஆனால், இந்த முறை பயனுள்ளதா?
கண் மருத்துவர் நவ்யா சி, மாண்டலின் கருத்துடன் உடன்படுகிறார் (senior consultant opthalmology at Athreya Super Speciality Hospital agrees with Mandell). கண்ணின் மேற்பரப்பில் கண்ணீரை சமமாகப் பரவச் செய்வதன் மூலம் கண்களின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் கண் சிமிட்டுதல் முக்கிய பங்கு வகிக்கிறது, இது கண்களை உயவூட்டுகிறது மற்றும் எரிச்சலை நீக்குகிறது.
ஒவ்வொரு கண் சிமிட்டலும் லாக்ரிமல் சுரப்பிகளில் இருந்து கண்ணீர் சுரக்க உதவுகிறது, இதில் ஈரப்பதம் மற்றும் அத்தியாவசிய புரதங்கள் உள்ளன, அவை கண் மேற்பரப்பை பராமரிக்கின்றன மற்றும் வறட்சியை எதிர்த்துப் போராடுகின்றன
வறண்ட கண் நிலைகளில் உள்ள பொதுவான பிரச்சினையான கண்ணின் கண்ணீர்ப் படலம் ஆவியாவதைத் தடுக்க இந்த வழக்கமான லுப்ரிகேன்ட் இன்றியமையாதது.
வறண்ட கண்களுக்கு பயனுள்ள சிமிட்டும் நுட்பங்கள்
வறண்ட கண்களின் அறிகுறிகளைத் தணிக்க, கண் இமைகள் முழுவதுமாகத் தொடர்பு கொள்ளும் இடத்தில் முழுமையான சிமிட்ட பரிந்துரைக்கப்படுகிறது. இவை அதிகபட்ச கண்ணீர் பரவல் மற்றும் கண் மேற்பரப்பில் ஈரப்பதத்தை உறுதி செய்கின்றன.
ஒவ்வொரு சில வினாடிகளிலும் ஒருவர் வேண்டுமென்றே முழுமையாக கண் சிமிட்டுவது நன்மை பயக்கும். ஏசி அறைகள் அல்லது டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்தும் போது கண்ணீர் ஆவியாவதை ஊக்குவிக்கும் சூழல்களில் இந்த நடைமுறை மிகவும் முக்கியமானது.
கண் சிமிட்டும் பயிற்சிகளை மட்டுமே நம்பியிருப்பதால் ஏற்படும் அபாயங்கள்
கண் சிமிட்டும் பயிற்சிகள் பலனளிக்கும் அதே வேளையில், கடுமையான அல்லது நாள்பட்ட வறண்ட கண் நிலைகள் உள்ளவர்களுக்கு அவற்றை மட்டுமே நம்பியிருப்பது போதுமானதாக இருக்காது.
அடிப்படைக் காரணங்களையோ அல்லது மிகவும் கடுமையான அறிகுறிகளையோ கவனிக்காமல் கண் சிமிட்டுவதை மட்டும் அதிகமாகச் சார்ந்திருப்பது நிலைமையை மோசமாக்கும், என்று நவ்யா வலியுறுத்துகிறார்.
Read in English: Incorporate a quick blinking exercise to tackle dry eyes, expert says
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.