முதுமையின் முதல் அறிகுறிகள் நம் கண்களுக்கு அருகில்தான் தெரியும். அண்டர் ஐ கிரீம்கள் முக்கியம், ஏனென்றால் நம் உடலின் மற்ற பகுதிகளில் உள்ள தோலுடன் ஒப்பிடும்போது நம் கண்களைச் சுற்றியுள்ள தோல் மெல்லியதாக இருக்கும். இது மென்மையானது மற்றும் உணர்திறன் கொண்டது.
எனவே, முதுமையின் அறிகுறிகள் தோன்றுவதற்கு முன் அல்லது வீங்கிய கண்களுடன் எழுந்த பிறகு’ பயன்படுத்தப்படும் ஒரு ஐ கிரீம் நிச்சயமாக நிறைய உதவுகிறது.
உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தில் ஒன்றை இணைக்க நீங்கள் விரும்பினால், நீங்களே வீட்டில் செய்யக்கூடிய இந்த அழகுக் குறிப்பை முயற்சிக்கவும்.
அண்டர் ஐ கிரீம் எப்படி செய்வது?
/indian-express-tamil/media/media_files/HDGcuspy8bTKupmscz55.jpg)
ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து, வைட்டமின் ஈ காப்ஸ்யூலைச் சேர்க்கவும். இதை ஒன்றாக கலந்து, அதனுடன் ரோஸ் வாட்டர், சில துளிகள் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். லாவெண்டர், கெமோமில் அல்லது டீ ட்ரீ எண்ணெய் போன்ற உங்களுக்கு பிடித்த அத்தியாவசிய எண்ணெயையும் நீங்கள் சேர்க்கலாம்.
நன்றாக அதை மிக்ஸ் செய்து ஒரு காற்று புகாத கன்டெய்னரில் மாற்றவும். ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் குளிர்ச்சியான விளைவுக்காக பிரிட்ஜில் சேமிக்கவும். இது வீக்கத்தைத் தடுக்க உதவும்.
ஒவ்வொரு முறையும் நீங்கள் ஜெல்லை வெளியே எடுக்கும்போது, அது உறிஞ்சப்படும் வரை, உங்கள், கண்கள், கண்களுக்கு கீழ் உள்ள பகுதி, மற்றும் புருவம் எலும்பின் மீது மென்மையான அழுத்தத்துடன் வட்ட இயக்கங்களில் தடவுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“