சத்து நிறைந்த எள்ளு குழம்பு செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
எள்ளு - 2 டேபிள் ஸ்பூன்
வர மிளகாய் - 9
தனியா - 1 ஸ்பூன்
பச்சரிசி - 1 ஸ்பூன்
துவரம் பருப்பு - 1 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - கைப்பிடி அளவு
தக்காளி - 1
கத்திரிக்காய் - 6
முருங்கைக்காய் - 1
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுந்து - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் - 1/2 ஸ்பூன்
பூண்டு - 5 பற்கள்
புளி கரைசல் - தேவையான அளவு
செய்முறை
முதலில் அடுப்பில் கடாய் வைத்து அதில் வரமிளகாய், தனியா, அரிசி, துவரம்பருப்பு சீரகம், வெந்தயம் எல்லாவற்றையும் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.
பின் எள்ளையும் அதனுடன் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும், இதை நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது மீண்டும் கடாய் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், உளுந்து சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும். பின் வெங்காயம், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்க்கவும். அடுத்து கத்திரிக்காய் மற்றும் முருங்கைக்காய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும் இப்போது புளி கரைசலையும் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். காய்கறிகளை நன்கு வேக விடவும். இவை நன்கு கொதித்து வந்த பின் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து கிளறி தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி விட்டு எடுத்தால் சுவையான எள்ளு குழம்பு ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“