Advertisment

முக அழகு: ப்ளீஸ்... இதை மட்டும் செய்யாதீங்க!

Facial Tips: வழக்கமாக பயன்படுத்தும் சோப்பை பயன்படுத்தக்கூடாது அது உங்கள் சருமத்தை விரைவாக வறண்டதாக மாற்றி விடும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Beauty Tips

Beauty Tips

Face Beauty Tips in Tamil: சரும பராமரிப்பை பொருத்தவரை உங்கள் முகத்தை இயற்கையாக பளபளக்க வைக்க பயன்படுத்துவதற்கு பல பொருட்கள் உள்ளன. அதே போல் நீங்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டிய விஷயங்களும் உள்ளன. தோலின் அமைப்பு மற்றும் தரம் நபருக்கு நபர் மாறுபடும், எனவே அடுத்த முறை நீங்கள் முகப்பூச்சு (facial) செய்யும் போது தவிர்க்க வேண்டிய பொருட்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

Advertisment

Mayonnaise: உணவின் சுவையை கூட்டுவதற்காக பயன்படுத்தப்படும் இதை உங்கள் தலைமுடியின் தரத்தை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தலாம். ஆனால் இதை உங்கள் முகத்துக்கு பயன்படுத்தக் கூடாது ஏனென்றால் இது சிறு துளைகளை அடைக்கும் தன்மையுடையது. எனவே இது ஏற்கனவே உணர்ச்சிமிக்க, முகப்பரு உள்ள சருமங்களை மோசமடைய செய்துவிடும். எனவே இதை மொத்தமாக தவிர்ப்பது நல்லது.

Baking soda: உணவு சமைப்பது மற்றும் சுத்தம் செய்வதற்கு மட்டும் இதை பயன்படுத்தலாம். உங்கள் முகத்தில் இதை பயன்படுத்தினால் உங்கள் சருமத்தின் pH சமநிலையை நீங்கள் இழக்க நேரிடும். மேலும் உங்கள் முகத்தை மிகவும் வறண்டதாக மாற்றி அதிலுள்ள இயற்கையான ஈரப்பதத்தை இது நீக்கி விடும். ஏனென்றால் இயற்கையாகவே இது alkaline தன்மைக் கொண்டது.

பாதாம், தயிர், மஞ்சள்... நோயை விரட்ட எளிய உணவு முறைகள்

Shampoo: யாரும் ஷாம்புவை முகத்திற்கு பயன்படுத்துவது இல்லை என்றாலும் சிலநேரம் குளிக்கும் போது இது வடிந்து முகத்தில் பட்டுவிடும். முகம் மற்றும் சருமத்தில் இதன் தொடுகையை தவிர்க்க முயற்சிக்க வேண்டும் ஏனென்றால் இது சருமத்தை வறண்டதாக மாற்றிவிடும். ஷாம்புவை தலைக்கு மட்டும் பயன்படுத்துவது சிறந்தது.

எலுமிச்சை: சரும பராமரிப்புக்கான பல முகப்பூச்சுகளைச் செய்யும் போது சில சொட்டு எலுமிச்சை சாறை அதோடு சேர்த்துக் கொள்ள சொல்வது உண்டு. ஆனால் பொதுவாக எலுமிச்சை citrusy பண்பு கொண்டது மேலும் அதில் சில அமிலங்கள் உள்ளன இவை உங்கள் சருமத்துக்கு தீங்கு விளைவிக்கலாம். உங்கள் சருமத்துக்கு எது ஒத்துக் கொள்ளும் எது ஒத்துக் கொள்ளாது என்பதை புரிந்து வைத்துக் கொள்ளுங்கள். எலுமிச்சைக்கான எளிய மாற்று தக்காளி.

Body lotion: இதுவும் மக்கள் அடிக்கடி செய்யக்கூடிய ஒரு தவறு. சிலநேரம் பாடி லோஷனை முகத்துக்கும் பூசுகின்றனர். முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பயன்படுத்தப்படும் க்ரீம்களை விட பாடி லோஷனில் அடர்த்தியான தன்மை உள்ளது. எனவே இதை உடலில் மட்டுமே பூச வேண்டும். தவறி முகத்தில் பூசினால் அதிகப்படியான முகப்பருக்களை இது ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

Soap: தோல் நோய் நிபுணர் பரிந்துரை செய்யக்கூடிய மருத்துவ குணம் கொண்ட சோப்களை மட்டுமே உங்கள் முகத்தை கழுவ பயன்படுத்த வேண்டும். வழக்கமாக பயன்படுத்தும் சோப்பை பயன்படுத்தக்கூடாது அது உங்கள் சருமத்தை விரைவாக வறண்டதாக மாற்றி விடும். மேலும் நமைச்சலும் ஏற்படலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Healthy Life
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment