வயதைக் குறைக்கும் மேஜிக் க்ரீம்; வீட்டில் இருக்கும் இந்த 2 பொருட்கள் வைத்து செய்யலாம்
உங்கள் வயதைக் குறைத்து முகத்தை பொலிவாக மாற்றக் கூடிய ஒரு மேஜிக் க்ரீம் எப்படி தயாரிப்பது என்று இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம். இதனை எளிதாக செய்ய முடியும்.
உங்கள் வயதைக் குறைத்து முகத்தை பொலிவாக மாற்றக் கூடிய ஒரு மேஜிக் க்ரீம் எப்படி தயாரிப்பது என்று இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம். இதனை எளிதாக செய்ய முடியும்.
ஒரு வயது வரை பிறந்தநாள் கொண்டாட்டங்களில் அனைவருக்கும் எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால், ஒரு பருவத்திற்கு மேல் அதில் விருப்பம் இல்லாமல் போய்விடும். வயதாகிக் கொண்டு போவதை எல்லோராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. முகம் பார்ப்பதற்கு பொலிவு இல்லாமல், சுருக்கங்களுடன் காணப்படும் என்று சிலர் கருதுவார்கள்.
Advertisment
சத்தான உணவுகள் எடுத்துக் கொண்டு மற்றும் உடற்பயிற்சியை தொடர்ச்சியாக செய்யும் போது எந்த வயதானாலும் ஆரோக்கியமாக வாழ முடியும். எனினும், முகத்தில் அந்த வயது காட்டிக் கொடுக்கும் என்று சிலர் கருதுவார்கள். இதனை பெருமளவு குறைப்பதற்கு நீண்ட நாட்களாக சரும பராமரிப்பு முறையை பின்பற்ற வேண்டும்.
இதற்காக எத்தனையோ ஃபேஸ் க்ரீம், சீரம் மற்றும் டோனர் போன்ற பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால், இவற்றில் இருக்கும் இரசாயனங்கள் சில சமயங்களில் ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. அந்த வகையில், வீட்டில் இருக்கும் எளிமையான பொருட்களை பயன்படுத்தி ஒரு மேஜிக் க்ரீமை நாமே தயாரித்துக் கொள்ளலாம்.
ஒரு டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் தூளை எடுத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் கற்றாழை ஜெல் சேர்க்க வேண்டும். குறிப்பாக, கற்றாழை ஜெல்லை குறைந்தது 5 முதல் 7 முறையாவது சுடுதண்ணீரில் கழுவிய பின்னர் இதில் சேர்க்க வேண்டும்.
Advertisment
Advertisements
இந்த இரண்டையும் மிக்ஸியில் அரைத்து பசை பதத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் நமக்கு தேவையான மேஜிக் க்ரீம் தயாராகி விடும். இதனை முகம் மட்டுமின்றி கழுத்து, கைகள் ஆகிய இடங்களில் பயன்படுத்தலாம். அதன் பின்னர், சுமார் 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம்.
இந்த முறையை தொடர்ச்சியாக செய்யும் போது உங்கள் முகம் பார்ப்பதற்கு மிகவும் பொலிவாக இருக்கும். வயோதிகத்தின் காரணமாக முகத்தில் ஏற்படக் கூடிய மாற்றங்களும் கட்டுப்படுத்தப்படும்.
நன்றி - Lavanya Selvakumar Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.