ஆரஞ்சு பழ தோலை இனி தூக்கிப் போடாதீங்க... தோலை 'பளீச்' செய்யும் க்ரீம்; இப்படி ரெடி பண்ணுங்க!
ஆரஞ்சு பழத்தின் தோலை பயன்படுத்தி ஃபேஸ் கிரீம் எப்படி தயாரிப்பது என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதனை இரசாயனங்கள் சேர்க்காமல் வீட்டிலேயே நம்மால் செய்ய முடியும்.
ஆரஞ்சு பழத்தின் தோலை பயன்படுத்தி ஃபேஸ் கிரீம் எப்படி தயாரிப்பது என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதனை இரசாயனங்கள் சேர்க்காமல் வீட்டிலேயே நம்மால் செய்ய முடியும்.
சரியான சரும பராமரிப்பு முறையை பின்பற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வு தற்போதைய சூழலில் பலரிடத்தில் இருக்கிறது. இதன் தேவை மற்றும் முக்கியத்துவத்தை சமூக ஊடகங்கள் வாயிலாக மக்கள் அறிந்து கொள்கின்றனர்.
Advertisment
எனினும், சரியான சரும பராமரிப்பு முறையை தேர்ந்தெடுப்பது தான் சிலருக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதற்காக எந்த வகையைச் சேர்ந்த ஃபேஸ் கிரீம், சீரம் போன்ற பொருட்களை வாங்க வேண்டும் என்று இணையத்தில் பலரும் தேடுகின்றனர்.
எனினும், இரசாயனங்கள் சேர்க்கப்பட்ட ஃபேஸ் கிரீம் ஆகியவற்றை பயன்படுத்தும் போது, அவை வேறு ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடுமோ என்ற தயக்கம் பலரிடத்தில் இருக்கும். அதன்படி, வீட்டில் இருக்கும் சிம்பிளான பொருட்களை கொண்டு ஃபேஸ் கிரீம் தயாரிக்கலாம். குறிப்பாக, ஆரஞ்சு பழத்தின் தோல்கள் இதற்கு போதுமானதாக இருக்கும்.
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. ஆரஞ்சு பழத்தில் எந்த அளவிற்கு சத்து இருக்கிறதோ, அதே அளவிற்கு அதன் தோலிலும் சத்து இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, இந்த ஆரஞ்சு பழத்தின் தோல்களை நம் ஸ்கின் கேரில் பயன்படுத்தினால், சருமம் பொலிவாகும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Advertisment
Advertisements
இதற்காக ஃப்ரெஷ்ஷான இரண்டு ஆரஞ்சு பழத்தின் தோல்களை எடுத்துக் கொள்ள்லாம். இத்துடன் இரண்டு ஸ்பூன் தயிர் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். இது பசை பதத்திற்கு வந்ததும் இரண்டு ஸ்பூன் அரிசி மாவு மற்றும் காய்ச்சாத பால் சேர்த்து மீண்டும் அரைக்க வேண்டும்.
இவ்வாறு செய்தால் ஹோம்மேட் ஃபேஸ் கிரீம் தயாராகி விடும். இந்த ஃபேஸ் கிரீமை முகத்தில் தேய்த்து விட்டு சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். இப்படி செய்தால் நம் முகம் பார்ப்பதற்கு பொலிவாக மாறிவிடும். இதனை முகம் மட்டுமல்லாமல் மற்ற இடங்களிலும் கூட பயன்படுத்தலாம்.
நன்றி - Arshi's tasty kitchen Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.