நம் முகத்தை நாள் முழுவதும் பொலிவாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க வேண்டுமென பலரும் கருதுவார்கள். இதற்காக கடைகளில் இருந்து பல்வேறு க்ரீம்கள், ஃபேஸ் சீரம், டோனர் போன்ற பொருள்களை பயன்படுத்துவார்கள். இவை வாங்குவதற்கு அதிகமாக பணம் செலவாகும் என்பதையும் கடந்து, சிலருக்கு இவை சரும பிரச்சனைகளை உருவாக்கும்.
இதனால், பக்கவிளைவுகளற்ற எளிமையான ஃபேஸ் பேக்கை வீட்டிலேயே செய்து பயன்படுத்தலாம். அந்த வகையில் கற்றாழை மற்றும் வைட்டமின் ஈ மாத்திரை கொண்டு உருவாக்கப்படும் ஃபேஸ் பேக் குறித்து தற்போது பார்க்கலாம். முதலில் கற்றாழையை நன்றாக கழுவி அதன் ஜெல்லை தனியாக எடுக்க வேண்டும். பின்னர், வைட்டமின் ஈ மாத்திரையை மெலிதாக வெட்டி அதன் மருந்தை கற்றாழையுடன் சேர்த்து கலக்க வேண்டும்.
இதை முகத்தில் தேய்த்துவிட்டு 30 நிமிடங்களுக்கு பின்னர் குளித்தால், முகம் பளபளப்பாகவும், பொலிவாகவும் இருக்கும். இதை அனைத்து பாலினத்தவரும் தினசரி பயன்படுத்தலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“