முகத்தை இன்ஸ்டன்ட் பொலிவாக மாற்றும் பார்ட்டி ஃபேஸ்பேக்; இந்த 2 பொருட்கள் மட்டும் இருந்தா போதும்!
முக்கிய நிகழ்வுகளுக்கு செல்லும் முன்னர் நம் முகத்தை இன்ஸ்டன்ட் பிரைட்டாக மாற்றும் ஃபேஸ்பேக் குறித்து இக்குறிப்பில் பார்க்கலாம். இதை செய்ய 2 பொருட்கள் மட்டும் இருந்தால் போதும்.
தற்போதைய சூழலில் நிலவி வரும் காற்று மாசுபாடு மற்றும் சுற்றுச் சூழல் சீர்கேடு ஆகியவை நம் ஆரோக்கியத்தை பாதிப்பதுடன் சேர்த்து, சருமத்தையும் பாதிக்கிறது. எனவே, முகத்தை எப்போதும் பொலிவாக, புத்துணர்ச்சியாக வைத்திருக்க நிச்சயம் ஏதேனும் ஒரு சரும பராமரிப்பு முறையை பின்பற்ற வேண்டியது அவசியம்.
Advertisment
குறிப்பாக, முக்கியமான நிகழ்வுகள், விழாக்கள் அல்லது பார்ட்டிகளுக்கு செல்லும் போது மேலும் பொலிவாக காட்சியளிக்க வேண்டும் என்ற ஆசை எல்லோரிடத்திலும் இருக்கும். இதற்காக நிறைய பணம் செலவளித்து ஃபேஸ் கிரீம்கள், சீரம், டோனர் போன்றவற்றை பயன்படுத்துவதற்கு சிலர் விருப்பப்படுவார்கள்.
ஆனால், இயற்கையான முறையில் இரசாயனங்கள் எதுவும் சேர்க்காமல் வீட்டிலேயே செய்யக் கூடிய ஃபேஸ்பேக்குகளை பயன்படுத்துவதற்கு சிலர் விரும்புவார்கள். ஏனெனில், இயற்கையான முறையில் தயாரித்ததை பயன்படுத்தும் போது ஒவ்வாமை ஏற்படுவது தடுக்கப்படும். இதற்காக அதிக செலவும் ஆகாது.
அந்த வகையில் நம் முகத்தை இன்ஸ்டன்ட் பொலிவாக மாற்றக் கூடிய ஃபேஸ்பேக்கை தற்போது பார்க்கலாம். 4 முந்திரி பருப்புகளை, சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து பசை பதத்திற்கு அரைக்க வேண்டும். முகம் சற்று வறண்டு இருப்பதை போன்று தோன்றினால், 3 துளிகள் பாதாம் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.
Advertisment
Advertisements
இந்த ஃபேஸ்பேக்கை முகம் முழுவதும் தேய்க்க வேண்டும். பின்னர், இந்த ஃபேஸ்பேக் நன்றாக காய்ந்ததும் கழுவி விடலாம். விழாக்ககளுக்கு செல்வதற்கு முன்னர் மட்டுமல்லாமல், வாரத்திற்கு மூன்று முறை கூட இந்த ஃபேஸ்பேக் பயன்படுத்தலாம். இது நம் முகத்தை சட்டென பொலிவாக மாற்றிவிடும்.
நன்றி - Eyekiller Tamil Beauty Tips Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.