face pack with Blueberry, face pack routine, face pack home made remedies, Blueberry home made remedies to skin care, face mask with blueberry, புளுபெர்ரி, ஃபேஸ்பேக்
Face Pack News In Tamil: புளூபெர்ரியை (Blueberries) அதன் சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகளுக்காக நாம் சாப்பிடுகிறோம். ஸ்டராபெர்ரியைப் போல புளூபெர்ரியும் வெளிப்புறமாக பயன்படுத்தும் போது சரும பராமரிப்புக்கு மிகவும் நல்லது.
Advertisment
புளூபெர்ரியில் வயது முதிர்ச்சியை தடுக்கும் சில பண்புகள் உள்ளன, அவை உங்கள் சருமத்தை தளர்வடையாமல் வைத்திருக்கும். மேலும் உங்கள் சருமத்தை தினசரி இயற்கையான வழியில் சுத்தம் செய்வதற்கும் முகப்பரு பிரச்சனையை போக்குவதற்கும் இது சிறந்தது.
Blueberry to skin care: எப்படி பயன்படுத்துவது ?
புளுபெர்ரியை பயன்படுத்தி முகப்பூச்சு செய்து அதை பயன்படுத்துவதன் மூலம் சரும சேதத்தை தடுக்கலாம். இதற்கு சிறிது புளுபெர்ரியுடன் மூன்று தேக்கரண்டி தயிர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து ஒரு கட்டியான பேஸ்ட் போல செய்துக் கொள்ள வேண்டும். இந்த பேஸ்டை முகம் மற்றும் கழுத்து பகுதியில் பூசி அதை நன்றாக மசாஜ் செய்து 20 நிமிடங்கள் அப்படியே உலர விடவும். பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை நன்றாக கழுவிக் கொள்ளவும்.
Advertisment
Advertisements
தயிர் முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும், அதே சமயம் புளுபெர்ரி இரத்த ஓட்டத்தை சீராக்கி உங்கள் சருமத்தை இளமையான தோற்றத்தோடு வைத்திருக்கும்.
மேலும் உங்கள் முகத்தில் பருக்கள் இருந்தால் மெதுவாக மசாஜ் செய்யும் போது அதற்கான நிவாரணம் கிடைக்கும். புளூபெர்ரியில் salicylic அமிலத்தின் உப்பான salicylate இருப்பதாக நம்பப்படுகிறது. இது முகப்பரு சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது.
மாற்றாக இதில் சிறிது எலுமிச்சை சாற்றையும் கலக்கலாம். சிறிது புளுபெர்ரி, சில துளி எலுமிச்சை சாறு மற்றும் சிறிது தேனையும் கலந்து ஒரு பேஸ்ட் செய்துக் கொள்ளவும். இந்த பேஸ்டை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தேய்த்து 15 நிமிடங்கள் உலர விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் முகத்தில் புதிய பளபளப்பை காணலாம். எண்ணெய் பாங்கான சருமம் உடையவர்கள் இதை பயன்படுத்தலாம், இந்த முகப்பூச்சை குறைந்தது வாரத்துக்கு ஒரு முறை பயன்படுத்தலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil