முகத்தை பொலிவாக பராமரிப்பதற்கு ஏராளமாக பணம் செலவு செய்து ஃபேஸ்கிரீம்கள், சீரம்கள், டோனர் போன்றவற்றை வாங்க வேண்டும் என்று சிலர் நினைப்பார்கள். ஆனால், இவற்றுக்கு அதிகமாக பணம் செலவு செய்ய விருப்பம் இல்லாமலும் சிலர் இருப்பார்கள்.
இன்னும் சிலர் இது போன்ற பொருட்களை பயன்படுத்தினால் ஒவ்வாமை ஏற்படுமோ என்ற அச்சத்தில் இருப்பார்கள். ஏனெனில், இவற்றில் அதிகமாக இரசாயனங்கள் சேர்ந்திருப்பதால் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்ற தயக்கம் காணப்படும்.
எனினும், முகத்தை பொலிவாக வைத்துக் கொள்வதற்கு இயற்கையான முறையில் ஏதாவது வழி இருக்கிறதா என்று இணையத்தில் பலர் தேடுகின்றனர். அந்த வகையில் நம் வீட்டில் சாதாரணமாக கிடைக்கும் சில எளிய பொருட்களை கொண்டு நாமே ஃபேஸ்பேக் தயாரிக்க முடியும்.
இதற்காக ஏலக்காய் பொடி, அரிசி பொடி மற்றும் பால் இருந்தால் போதும். இவை மூன்றையும் நம் முகத்திற்கு தேவையான அளவு எடுத்து பசை பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர், இந்த ஃபேஸ்பேக்கை நம் முகத்தில் தேய்த்து மசாஜ் செய்யலாம். இறுதியாக சுமார் 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விடலாம்.
இப்படி செய்தால் முகம் பார்ப்பதற்கு பொலிவாக இருக்கும். இதில் இரசாயனங்கள் சேர்க்காததால் தொடர்ச்சியாக பயன்படுத்தினாலும் பாதிப்புகளை ஏற்படுத்தாது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.