இந்த 2 பொருட்கள் இருந்தால் போதும்; வீட்டிலேயே ஈசியா ஃபேஷியல் பண்ணலாம்! நடிகை அக்‌ஷிதா அசோக்

தயிர் மற்றும் உருளைக் கிழங்கு சேர்த்து வீட்டிலேயே எப்படி ஈசியாக ஃபேஷியல் செய்யலாம் என்று நடிகை அக்‌ஷிதா அசோக் தெரிவித்துள்ளார். இது முகத்தில் இருக்கும் கருமையை நீக்க உதவுகிறது.

author-image
WebDesk
New Update
Actress Akshitha Ashok

கோடை காலம் முழுமையாக தொடங்குவதற்கு முன்னரே பல்வேறு ஊர்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் வெளியே சென்று வீடு திரும்புவதற்குள் உடல் அதிகமாக சோர்வடைந்து விடுகிறது. இதற்காக நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிட வேண்டும் என வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Advertisment

உடல் ஆரோக்கியம் என்பது சருமத்தையும் சேர்த்தது தான். அந்த வகையில் உடல் சோர்வை முகம் தான் எளிதாக காட்டிக் கொடுக்கும். மாணவர்கள், அலுவலக பணிக்கு செல்பவர்கள், மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்கள் என பலருக்கும் வெயிலிலேயே அதிகமாக சுற்ற வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது.

வெயில் நேரத்தில் அடிக்கடி  வெளியே செல்வதால் முகம் கருமையாக மாறி விடும். இதனை போக்குவதற்காக பியூட்டி பார்லருக்கு சென்று ஃபேஷியல் செய்யும் பழக்கம் சிலரிடம் காணப்படும். அதற்காக அடிக்கடி பியூட்டி பார்லர் செல்வதும் சாத்தியமற்றது.

ஃபேஸ் க்ரீம், சீரம் போன்றவற்றில் இரசாயனங்கள் கலந்திருப்பதால் அதனை பயன்படுத்தினால் ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகள் ஏற்படுமோ என்கிற தயக்கும் மக்களிடையே நிலவுகிறது. அந்த வகையில், முகத்தில் இருக்கும் கருமையை போக்க வீட்டிலேயே ஃபேஷியல் செய்து கொள்வதற்கான டிப்ஸை நடிகை அக்‌ஷிதா அசோக் தெரிவித்துள்ளார்.

Advertisment
Advertisements

அதன்படி, நம் முகத்திற்கு தேவையான அளவு தயிர் மற்றும் ஒரு உருளைக் கிழங்கை தோல் சீவி மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்க வேண்டும். இவை பசை பதத்திற்கு வந்ததும் நம் முகத்தில் தடவி விட்டு சுமார் 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம்.

இவ்வாறு செய்தால் முகத்தில் இருக்கும் கருமை நீங்கி விடும் என நடிகை அக்‌ஷிதா அசோக் கூறுகிறார். இதில் இரசாயனங்கள் எதுவும் சேர்க்காததால் ஒவ்வாமை ஏற்படுவதற்கான வாய்ப்பும் இல்லை.

நன்றி - Say Swag Youtube Channel

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Facemask Amazing skin care tips for summer

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: