முகத்தை பொலிவாக வைத்திருக்க பல விதமான முயற்சிகளை மேற்கொண்டிருப்போம். இதற்காக சிலர் பணம் செலவு செய்து ஃபேஸ் கிரீம்கள், சீரம், டோனர் என சில பொருட்களையும் வாங்கி இருப்பார்கள். எனினும், இதில் இருந்து எதிர்பார்த்த அளவிற்கு முகப்பொலிவு கிடைக்கவில்லை என்றும் சிலர் கூறுகிறார்கள்.
ஆனால், இவற்றை பயன்படுத்துவதால் ஒவ்வாமை ஏற்படுமோ என்ற தயக்கம் இருப்பவர்கள், வேறு விதமான இயற்கையான முறையில் முகத்தை பொலிவாக வைத்திருக்க முடியுமா என்று சிந்திப்பார்கள். இதற்கான விடையை இணையத்தில் தேடினால் ஏராளமான பதில்கள் வரும். இவற்றில் எது சிறந்தது என்று தேர்ந்தெடுப்பதும் குழப்பமாக இருக்கும்.
அதனடிப்படையில், நம் முகத்திற்கு தேவையான ஃபேஸ்பேக்கை எந்த விதமான இரசாயனங்களும் சேர்க்காமல் சுலபமாக செய்வது எப்படி என இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதனை செய்வதற்கு ஒரு வாழைப்பழமும், சிறிதளவு தேனும் இருந்தால் போதும்.
ஒரு வாழைப்பழத்தை சிறிய துண்டுகளாக வெட்டி, அதனுடன் கொஞ்சமாக தேன் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். இவை பசை பதத்திற்கு வந்ததும், நம் முகத்தில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின்னர், 20 நிமிடங்கள் கழித்து இதைக் கழுவி விடலாம். இப்படி செய்தால் நம் முகம் பார்ப்பதற்கு பொலிவாக இருக்கும்.
இதில் வேறு விதமான இரசாயன பொருட்கள் சேர்க்காததால் ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்பும் கிடையாது. எனவே, இதனை தொடர்ச்சியாக பயன்படுத்தினாலும் பிரச்சனைகள் ஏற்படாது. முகமும் பளபளப்பாக ஜொலிக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.