காபி பொடி, தேன் இருந்தா போதும்; உங்க முகத்தை எப்போதும் இளமையாக வைத்திருக்கலாம்: எப்படின்னு பாருங்க!
முகத்தை எப்போதும் இளமையாகவும், பொலிவாகவும் வைத்திருக்கக் கூடிய சூப்பரான ஃபேஸ்பேக் எப்படி தயாரிப்பது என்பது குறித்து இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இவற்றை வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு செய்ய முடியும்.
என்றுமே பார்ப்பதற்கு பொலிவாகவும், இளமையாகவும் காட்சியளிக்க வேண்டும் என்பது எல்லோரது விருப்பமாகவும் இருக்கும். ஆனால், அதற்கு ஏற்றார் போல் முகத்தை பரமரிப்பது சவாலான காரியம். இத்தகைய தோற்றத்திற்கு அதிக மெனக்கெடல் இருக்க வேண்டும் என பலரும் கருதுவார்கள்.
Advertisment
இளமையாக தோற்றமளிப்பதற்கு சாப்பிடக் கூடிய உணவு எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு சரும பராமரிப்பும் அவசியமானது. இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் காற்று மாசுபாடு போன்றவை நம் சருமத்தை அதிகப்படியாக பாதிக்கிறது. இதற்காக எந்நேரமும் வீட்டிலேயே நம்மால் இருக்க முடியாது.
இதற்காக சில அழகு சாதன பொருட்களும் கடைகளில் பிரத்தியேகமாக கிடைக்கின்றன. ஆனால், இதில் இரண்டு பிரச்சனைகள் இருக்கின்றன. ஒன்று, இந்த பொருட்கள் அனைத்தும் பெரும்பாலும் விலை அதிகமானதாக இருக்கும். மற்றொன்று, இவற்றில் இரசாயனங்கள் கலந்திருக்கும். இந்த இரசாயனங்கள் சில சூழலில் ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடும்.
அந்த வகையில், நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சூப்பரான ஃபேஸ்பேக்கை தயாரித்து பயன்படுத்தலாம். இரண்டு ஸ்பூன் காபி பொடியுடன், ஒரு ஸ்பூன் தேன் மற்றும் சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து பசை பதத்திற்கு கலக்க வேண்டும். இப்படி செய்தால் அசத்தலான ஃபேஸ்பேக் தயாராகி விடும்.
Advertisment
Advertisements
இந்த ஃபேஸ்பேக்கை முகத்தில் தடவி விட்டு சுமார் 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். இதன் மூலம் நம் முகம் பார்ப்பதற்கு இன்ஸ்டன்ட் பொலிவாக மாறி இளமையாக காட்சியளிக்கும். இதில் இருக்கும் காபி பொடி கண்களைச் சுற்றியிருக்கும் கருவளையங்களை நீக்க உதவும். மேலும், கருமையை போக்கவும் காபி பொடி பயன்படுகிறது.
இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை என தொடர்ச்சியாக இந்த ஃபேஸ்பேக்கை பயன்படுத்தினால், நம் முகம் இளமையாக காட்சியளிக்கும்.
நன்றி - Eyekiller Tamil Beauty Tips Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.