முக்கிய வேலையாக வெளியே செல்லும் போது அல்லது ஏதேனும் விழாக்களில் கலந்து கொள்வதற்கு தயாராகும் போது தான் நம் முகம் பொலிவு இல்லாமல் காட்சியளிக்கும். இதனை சரி செய்வதற்கு உடனடியாக பியூட்டி பார்லருக்கு செல்ல முடியாது.
மேலும், முகத்தை உடனடியாக பொலிவாக்கும் என சில ஃபேஸ்கிரீம்களை விளம்பரம் செய்வார்கள். ஆனால், அவற்றில் அதிகப்படியான இரசாயனங்கள் கலந்திருப்பதால் பல நேரத்தில் ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.
இதற்காக இயற்கையான முறையில் முகத்தை உடனடியாக பொலிவாக்க முடியுமா என்று இணையத்தில் நாம் தேடி இருப்போம். அதற்கான தீர்வை இதில் பார்க்கலாம். அதன்படி, நம் வீட்டில் சிறிதளவு பால் மற்றும் தேன் இருந்தாலே போதும்.
ஒரு துண்டு காட்டனை பாலில் நனைத்து நம் முகத்தில் தேய்க்க வேண்டும். அதன் பின்னர், 5 நிமிடங்கள் கழித்து சுத்தமான தேனை சிறிதளவு எடுத்து முகத்தில் தடவிக் கொள்ள வேண்டும். இதனை சிறிது நேரத்திற்கு பின்னர் கழுவினால் முகம் பார்ப்பதற்கு பொலிவாக இருக்கும். இதில் இரசாயன பொருட்கள் பயன்படுத்தாததால் ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்பும் இல்லை.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.