கஸ்தூரி மஞ்சளுடன் கொஞ்சமாக துளசி பொடி; உங்கள் முகத்தை பளிச்சென மாற்றும் இந்த ஃபேஸ்பேக்: ட்ரை பண்ணுங்க மக்களே

நம் முகத்தை பளிச்சென மாற்றுவதற்கு சிம்பிளான ஒரு ஃபேஸ்பேக் தயாரிப்பது எப்படி என இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதற்காக முற்றிலும் இயற்கையான பொருட்கள் மட்டுமே பயன்படுத்தினால் போதும்.

நம் முகத்தை பளிச்சென மாற்றுவதற்கு சிம்பிளான ஒரு ஃபேஸ்பேக் தயாரிப்பது எப்படி என இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதற்காக முற்றிலும் இயற்கையான பொருட்கள் மட்டுமே பயன்படுத்தினால் போதும்.

author-image
WebDesk
New Update
Turmeric face pack

சரும பராமரிப்பின் அவசியம் குறித்து தற்போது பலரும் விழிப்புணர்வுடன் இருக்கின்றனர். சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வதுடன், நம் சருமத்தை வெளிப்புறமாகவும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். அப்படி செய்யும் போது நம்முடைய சருமம் பார்ப்பதற்கு பொலிவாக இருக்கும்.

Advertisment

இதற்காக சிலர் அடிக்கடி பியூட்டி பார்லருக்கு சென்று ஃபேஷியல் செய்யும் பழக்கத்தை கடைபிடிக்கின்றனர். மேலும், ஃபேஸ் க்ரீம், சீரம் மற்றும் டோனர் போன்ற பொருட்களை முகத்திற்கு பயன்படுத்துகின்றனர். ஆனால், எல்லோராலும் இதற்கு செலவு செய்ய முடியாது.

மேலும், இது போன்ற பொருட்களில் இரசாயனங்கள் சேர்ந்திருப்பதால் சிலரது சருமத்தில் ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் இயற்கையான முறையில் அதிக செலவு இல்லாமல் சருமத்தை பராமரிக்க முடியுமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும்.

அதன்படி, வீட்டிலேயே ஃபேஸ்பேக் தயாரித்து பயன்படுத்தாலாம். இதற்காக, இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் முல்தானி மெட்டி பொடி, அரை டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள், துளசி பொடி, மூன்று டீஸ்பூன் தேன் மற்றும் தயிர் ஆகிய அனைத்து பொருட்களையும் சேர்த்து பசை பதத்திற்கு கலக்க வேண்டும்.

Advertisment
Advertisements

இவ்வாறு செய்தால் நம் முகத்திற்கு தேவையான ஃபேஸ்பேக் தயாராகி விடும். இதை முகத்தில் தடவி விட்டு சுமார் 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். இந்த ஃபேஸ்பேக்கை தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது நம் முகம் பார்ப்பதற்கு பொலிவாக மாறி விடும். மேலும், அனைவரின் சருமத்திற்கும் ஏற்றதாக இந்த ஃபேஸ்பேக் இருக்கும். 

இது போன்று, வீட்டிலேயே ஃபேஸ்பேக் தயாரித்து பயன்படுத்துவதால் ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்பும் கிடையாது. இதன் காரணமாக பெரும்பாலானவர்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு ஃபேஸ்பேக் செய்கின்றனர்.

நன்றி - Lavanya Selvakumar Youtube Channel

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Skin Care

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: