ஊரடங்கு காலத்தில் குழந்தைகளை சுறுசுறுப்பாக்கும் செயல்கள்...

வீடுகளில் குழந்தைகள் வயதுக்கு ஏற்ப செய்யக்கூடிய வேலைகள் இருக்கின்றன. வளர்ந்த குழந்தைகள் குடும்பத்துக்காக படுக்கைகளை தயார் செய்யலாம்.

பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. இதனால் குழந்தைகள் முன் எப்போதையும் விட குழப்பமாகவும், அமைதியின்மையாகவும் இருக்கின்றனர். இதனால் பாதிக்கப்படும் அவர்கள், இந்த உணர்வுகளை வெளிப்படுத்துவது பெற்றோர்களுக்குப் புதிதாக இருக்கலாம்.

கோவிட்-19 நோய்தொற்று தொடர்ந்து பரவி வருவதாலும், அதன் விளைவாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதும் ஒவ்வொருவருக்கும் பிரச்னையாக இருக்கிறது . குறிப்பாக பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளை நல்ல செயல்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபடுத்துவதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர். பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. இதனால் குழந்தைகள் முன் எப்போதையும் விட குழப்பமாகவும், அமைதியின்மையாகவும் இருக்கின்றனர். இதனால் பாதிக்கப்படும் அவர்கள் இந்த உணர்வுகளை வெளிப்படுத்துவது பெற்றோருக்கு புதிதாக இருக்கலாம்.

இது போன்ற சூழலில் பெற்றோர்கள் தங்களின் வேலைகள் மற்றும் தங்கள்குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவது இரண்டுக்கும் இடையே சமநிலையை கடைபிடிக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். ஊரடங்கு காலத்தின் அனுபவத்தை ஒட்டு மொத்த குடும்பமும் எளிமையாகவும், ஆரோக்கியமானதாகவும் மாற்றுவதற்கான வழிகளை புரிந்து கொள்வோம்.

நொய்டாவில் உள்ள ஷிவ் நாடார் பள்ளியின் மூத்த ஆலோசகர் (உளவியல்) நூரா சின்கா, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஃபேஸ்புக் பக்கத்தில் நேரலையில் தம்முடைய உள்ளுணர்வுகளை பகிர்ந்து கொண்டார். சில தீர்வுகளையும் அவர் குறிப்பிட்டார். அவருடன் உரையாடியதில் இருந்து சில பகுதிகளை இங்கு பார்க்கலாம்.

முதலாவதாக மக்கள் இதில் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

கொரோனா தொற்று பெரும் அளவுக்கு கவலையை அதிகரித்திருக்கிறது. கவலையாக உணர்வது என்பது இயல்பான ஒன்றுதான். வீட்டில் இருந்தபடியே அலுவலக வேலைகளைப் பார்ப்பதால் பெற்றோர்கள் கவலையாக இருக்கின்றனர். இது அவர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கிறது. குடும்பத்தின் ஆரோக்கியம், அவர்களின் வேலை, சமூகம் உள்ளிட்டவற்றைப்பற்றி அவர்கள் கவலை கொள்கின்றனர். இதில் முக்கியமானது இந்த அம்சத்தை அறிந்து கொண்டு அதை ஏற்றுக் கொள்வது என்பது மிகவும் முக்கியமானதாகும்.

குழந்தைகள் இந்த ஊரடங்கில் எதிர்கொள்ளும் முக்கியமான சவால்கள் என்று எதை நீங்கள் கருதுகிறீர்கள்?

குழந்தைகளின் மொத்த வாழ்க்கையும் தலைகீழாக மாறி இருக்கிறது. அவர்கள் உற்சாகத்துடன் சென்ற இடம் பள்ளிக்கூடம். அது இப்போது கடந்த இரண்டு மாதங்களாகத் திறக்கப்படவில்லை. அடுத்தாக எப்போது திறக்கப்படும் என்பதும் தெரியவில்லை. எவ்வளவு மாதங்கள் ஆகலாம் என்பதும் நமக்குத் தெரியாது. இந்த நிச்சயமற்ற தன்மைதான் பெரிய சவால். இதுதான் மேலும் அதிக கவலையை ஏற்படுத்துகிறது. குழந்தைகளின் ஒட்டு மொத்த வழக்கமான கட்டமைப்பே மாறியிருக்கிறது. அவர்களால் வெளியே போக முடியவில்லை. நண்பர்களுடன் விளையாட முடியவில்லை. அவர்களின் நண்பர்களும் அவர்களை வந்து சந்திக்க முடியவில்லை. இந்த சமநிலையற்ற தன்மை அவர்களிடம் கவலைகளை உருவாக்கி இருக்கிறது. ஒருவேளை இதை அவர்களால் விவரிக்க இயலாமல் போகலாம்.

மூத்தவர்கள் என்ற முறையில் நாம் கவலைகளை புறந்தள்ளிவிடுவோம். ஆனால், ஒவ்வொரு குழந்தையும் இந்த நிலையில் பாதுகாப்பாக இருப்பதை விரும்புவார்கள். கவலைகள், குழப்பத்தில் இருந்து தெளிவு பெற அவர்கள் விரும்புகின்றனர்.

வீட்டை கலகலப்பாகவும், வேடிக்கையாகவும் வைத்துக் கொள்வதற்கு பெற்றோர் என்னவிதமான செயல்களில் ஈடுபட வேண்டும்?

பெரும்பாலும் அமைதிப்படுத்துதல், தளர்வு செயல்பாடுகளில் நமது கவனம் இருக்க வேண்டும். அதாவது வண்ணம் தீட்டுதல் போன்ற சில பயிற்சிகள் உண்மையிலேயே அமைதியாக மேற்கொள்ள வேண்டிய செயல்பாடாக இருக்கும். வடிவங்கள் சார்ந்த உருவக்ங்களை நீங்கள் இணையதளங்களில் தேடலாம். வட்டங்கள் மற்றும் வடிவங்கள் போன்ற முறைகளில் அவை இருக்கலாம். உளவியல் ரீதியாகவும் இது தளர்வை கொடுக்கும் முறை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆழமான வகையில் மூச்சு பயிற்சி செய்வதும் உங்கள் குழந்தைகளிடம் தளர்வை ஏற்படுத்தும். இது கவலைகளைக் குறைக்க உதவும். உங்கள் குழந்தைகளிடம் பொறுமைய ஏற்படுத்தும்.
குழந்தைகள் அவர்களுடைய கவலைகளைப் பெற்றோரிடம் தந்து விடுவதாக உணரும் போது, குழந்தைகள் என்ன உணர்கின்றன என்பதை பெற்றோர் ஏற்றுக்கொள்வது பயனுள்ள மற்றொரு செயல்பாடாகும். அவர்களுடைய கவலைகள் பற்றி அவர்களிடம் விவாதித்தல், அவர்கள் கவலைகளை மறந்து நன்றாக உணர்வது வரை அவர்களிடம் இருப்போம் என்பதை அவர்களிடம் சொல்ல வேண்டும். அவர்கள் அமைதியான உணர்வுடன் இருப்பதற்கு சில நுட்பங்களை நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.

அவர்களை சுற்றி உள்ள ஐந்து விஷயங்களை நீங்கள் பார்க்க வைக்கலாம். நான்கு விஷயங்களை அவர்களைத் தொட வைக்கலாம். மூன்று விஷயங்களை அவர்களை வாசனையை நுகரச் செய்யலாம். இரண்டு விஷயங்களில்அவர்களைக் கேட்க வைக்கலாம். ஒரு விஷயத்தில் அவர்களை ருசியை அறிய வைக்கலாம். இது குழந்தைகளுக்கு மட்டுமின்றி, கவலைகொள்ளும் சூழலில் உள்ள மூத்தவர்கள் கூட இந்த நுட்பத்தை மேற்கொள்ளலாம்.

பெற்றோர்களும் கவலைப்படும் போது என்ன நேர்கிறது? எப்படி அவர்கள் குழந்தைகளிடம் பொறுமையாக இருக்க வேண்டும். அவர்களை எச்சரிக்காமல் எப்படி இருப்பது?

பெற்றோர்கள்தான் முதலில் தம்மைத்தாமே அமைதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் பின்னர் குழந்தைகளிடம் அவர்கள் உரையாட வேண்டும். வேறு யாரையும் விடவும், குழந்தைகள்தான் எப்போதுமே உங்களைப் பார்த்துக் கொண்டே இருக்கின்றனர் என்பதை மறந்து விடவேண்டாம். நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ உங்களையே அவர்கள் ஒரு முன்மாதிரியாக கொள்கின்றனர். ஒரு பெற்றோராக இதை நீங்கள் சிந்திக்க வேண்டியது அவசியம்; என் குழந்தையிடம் நான் என்ன காண்பிக்கின்றேன்? நான் கவலையாக இருக்கும்பட்சத்தில் முதலில் அந்த கவலையை நானே எதிர்கொள்ள வேண்டும். என்னுடைய உணர்வுகளுடன் சண்டையிடாமல், என்னை நானே தளர்த்திக் கொள்கின்றேன்.

குழந்தைகள் அவர்களின் நண்பர்களைச் சந்திக்க முடியாதபோது, அவர்களுடன் வெளியே விளையாட முடியாத சூழலில், அவர்கள் பெரும்பாலான நேரத்தை மொபைலில் செலவிடுகின்றனர், தொலைகாட்சி பார்க்கின்றனர்.

எவ்வளவு தூரத்துக்கு இதுபோல திரைகளைப் பார்த்துக் கொண்டிருப்பதற்கு அவர்களை அனுமதிக்க வேண்டும்?

இரண்டு வயது வரை குழந்தைகளை மொபைல் அல்லது ஆன்லைன் அல்லது தொலைகாட்சித்திரைகளை பார்க்க அனுமதிகக் கூடாது. மூன்று முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளை ஒரு மணிநேரத்துக்கு அனுமதிக்கலாம். ஐந்து முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகளை ஒன்றரை மணி நேரம் அனுமதிக்கலாம். டீன் ஏஜ் என்றால் இரண்டு மணி நேரம் அனுமதிக்கலாம். ஆனால், இன்றைக்கு இது சாத்தியமில்லை. எனினும், திரைகளைப் பார்ப்பது குறித்த நல்ல செயல்பாடுகளை உருவாக்கவும். மொபைல், டிவிகள் பார்ப்பதால் வெளிப்படும் நீல ஒளி குறித்து பெற்றோர் கவலைப்பட வேண்டும். குழந்தையின் தோரணை, மொபைல் போன்ற திரைகளில் இருந்து எந்த நேரத்தில் அவர்கள் விடுபட வேண்டும். அவர்கள் போதுமான அளவுக்கு தூங்க வேண்டும் என்பது குறித்து பெறோறர் அக்கறை கொள்ள வேண்டும்.
பெற்றோர்கள், குழந்தைகள் இருதரப்பிலுமே இது போன்று திரைகளை பார்ப்பதில் இருந்து கொஞசம் இடைவெளி விட வேண்டும். விலகி இருங்கள். இது கண்களின் ஆரோக்கியத்துக்கு அவசியம். தோள்பட்டைகளை சுழற்றுதல் போன்ற அடிப்படையான சில பயிற்சிகள் தேவை. இது போன்ற விஷயங்கள் குடும்பம் கட்டுக்கோப்புடன் இருக்க உதவும். தூங்கப்போவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பே மொபைல், டிவி உள்ளிட்டவற்றை ஆஃப் செய்ய வேண்டும்.

வீட்டு வேலைகளில் பங்கெடுக்க குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டுமா? அப்படி எனில் எந்தமாதிரியான செயல்களில் ஈடுபடுத்த வேண்டும்?

வீடுகளில் குழந்தைகள் வயதுக்கு ஏற்ப செய்யக்கூடிய வேலைகள் இருக்கின்றன. வளர்ந்த குழந்தைகள் குடும்பத்துக்காக படுக்கைகளை தயார் செய்யலாம். மேஜைகளை ஒழுங்குப்படுத்தும் வேலைகளைச் செய்யலாம். ஒரு நாளைக்கு அவர்கள் சமைக்கலாம். குடும்பத்துக்காக என்னமாதிரியான உணவை அவர்கள் சமைத்தாலும் அதனை நீங்கள் ஊக்குவிக்க வேண்டும். இணைந்து சமையல் செய்வது என்பது மிகவும் அழகான செயல்பாடு. அவர்களை அதில் ஈடுபடுத்துங்கள்.

இளம் சிறுவர்களை எதிர்காலத்தில் வரும் நாட்களுக்காக எப்படி தயார்படுத்துவது?

இந்த நிச்சயமற்ற தன்மை பதட்டத்தை தூண்டும் என்பதைப் பெற்றோர்கள் குழந்தைகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும். ஒட்டு மொத்த உலகமும் அவர்களுடன் இருக்கிறது. அவர்களைத் தயார்படுத்துவது என்பது நல்ல யோசனை. முக கவசத்தை அவர்களிடம் அறிமுகம் செய்யுங்கள். அதனைச்சுற்றி விளையாட கொஞ்ச நரம் அனுமதியுங்கள். நீங்கள் வெளியே செல்வதற்கு முன்பு, அவர்கள் முக கவசம் கொடுத்தால், அது குழந்தைக்கும் உங்களுக்கும் வெறுப்பாக இருக்கும். ஒவ்வொரு மணி நேரமும் கை கழுவது அல்லது கைகளை சுத்தம் செய்யும் பழக்கத்தில் அவர்களை ஈடுபடுத்துங்கள். வாழ்க்கை இப்போது மாறப்போகிறது என்ற உண்மையை புரிந்து கொள்வதற்கு அவர்களை தயார் படுத்துங்கள்.

 

இதனை ஆங்கிலத்தில் படிக்க – Colouring, breathing activities, and more: How you can keep your child engaged in lockdown

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close