ஃபேஷியல் செய்ய பியூட்டி பார்லர் வேண்டாம்; ஏலக்காய் பொடியில் ஈஸியா பண்ணலாம் ஃபேஸ்பேக்
ஏலக்காய் பொடி, பால் மற்றும் அரிசி மாவு சேர்த்து வீட்டிலேயே எவ்வாறு ஃபேஸ்பேக் தயாரிக்கலாம் என்று இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம். இது முகத்தை பொலிவாக மாற்றும்.
ஏலக்காய் பொடி, பால் மற்றும் அரிசி மாவு சேர்த்து வீட்டிலேயே எவ்வாறு ஃபேஸ்பேக் தயாரிக்கலாம் என்று இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம். இது முகத்தை பொலிவாக மாற்றும்.
முகத்தை எப்போதும் பொலிவாக வைத்திருக்க வேண்டும் என்ற ஆசை நிறைய பேருக்கு இருக்கும். ஆனால், அதற்காக சரும பராமரிப்பு முறையை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது.
Advertisment
சரும பராமரிப்பு என்றதும் விலை உயர்ந்த ஃபேஸ் க்ரீம், சீரம், டோனர் போன்ற பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்று சிலர் நினைப்பார்கள். மேலும், சிலர் பியூட்டி பார்லர்களுக்கு சென்று ஃபேஷியல் செய்யும் வழக்கத்தை கடைபிடிப்பார்கள்.
ஆனால், இது போன்ற பொருட்களை பயன்படுத்தும் போது அவற்றில் சேர்க்கப்பட்டிருக்கும் இரசாயனம், சில சமயங்களில் ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். அந்த வகையில், இயற்கையான முறையை பின்பற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு ஃபேஸ்பேக்கை வீட்டிலேயே தயாரிக்கலாம். இதற்கான முறை டெய்ஸி ஹாஸ்பிடல் யூடியூப் சேனலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக பால், ஏலக்காய் பொடி மற்றும் அரிசி மாவு இருந்தால் போதும். இவை மூன்றையும் நம் முகத்திற்கு தேவையான அளவு எடுத்து பசை பதத்திற்கு கலக்க வேண்டும். இவ்வாறு செய்தால் சிம்பிளான ஃபேஸ்பேக் தயாராகி விடும்.
Advertisment
Advertisements
இந்த ஃபேஸ்பேக்கை நம் முகத்தில் தடவி விட்டு சுமார் 20 நிமிடங்களுக்கு பின்னர் கழுவி விடலாம். இவ்வாறு செய்வதன் மூலம் நம் முகம் பார்ப்பதற்கு இன்ஸ்டன்ட் பொலிவாக மாறி இருக்கும். மேலும், இதனை தொடர்ந்து செய்யும் போது கூடுதல் பலன் அளிக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.