முகத்தில் இருக்கும் தேவையில்லாத முடியை அகற்ற வாக்ஸிங், த்ரெடிங் மற்றும் லேசர் சிகிச்சைகள் போன்ற செயல்முறைகளை நீங்கள் நாடலாம். இருப்பினும், நீங்கள் வலியைத் தவிர்க்க விரும்பினால், அல்லது ஒரு காசு கூட செலவழிக்க விரும்பவில்லை என்றால், வீட்டிலேயே முக முடிகளை அகற்றுவதற்கான இயற்கையான வழிகள் உள்ளது.
வீட்டு வைத்தியம் முக முடிகளை அகற்றாது, ஆனால் அவற்றின் வளர்ச்சியைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது.
கொண்டைக்கடலை மாவு மாஸ்க்
கொண்டைக்கடலை மாவு, வீட்டில் மிக எளிதாகக் கிடைக்கும்.
ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நான்கு டேபிள் ஸ்பூன் கொண்டைக்கடலை மாவு, ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் கிரீம் மற்றும் 2-3 டீஸ்பூன் பால் சேர்த்து கலக்கவும்.
பேஸ்ட் திக் கன்சிஸ்டன்சி வரும் வரை அனைத்து பொருட்களையும் சரியாக கலக்கவும். பேஸ்ட்டை உங்கள் முகத்தில் தடவி உலர விடவும். பேஸ்ட் உங்கள் தோலில் போதுமான அளவு இறுக்கமாகி விட்டதாக உணர்ந்தவுடன், முடி வளர்வதற்கு எதிர் திசையில் பேஸ்ட்டை இழுக்க வேண்டும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இது மேல்நோக்கி இருக்கும்.
முதலில் இழுக்கும் போதே உடனடியாக முடி உதிர்ந்து போகாது. 2-3 முறை தொடர்ந்து செய்யும் போது, சில முடிவுகளை காட்டலாம்.
முகத்தை கழுவிய பிறகு, மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்த மறக்காதீர்கள்.
என்ன! உங்களுக்கும் முகத்தில் முடிகள் இருக்கிறதா? அப்போ மறக்காம இந்த மாஸ்க் டிரை பண்ணுங்க!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“