/indian-express-tamil/media/media_files/2025/06/25/facial-hair-removal-natural-remedies-2025-06-25-12-14-21.jpg)
Facial hair removal natural remedies
பெண்களுக்கு ஏற்படும் பல பிரச்சனைகளில், முகத்தில் தேவையற்ற முடிகள் வளர்வது பெரும் சங்கடத்தை ஏற்படுத்தும். முகத்தில் மீசை, தாடி போன்ற முடிகள் அதிக அளவில் வளர்வதை ஹிர்சூட்டிக் ஃபீச்சர்ஸ் (Hirsutic Features) என்று கூறுவார்கள். இது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படும் ஒரு நிலை. பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரோன் போன்ற பெண் ஹார்மோன்கள் இருந்தாலும், டெஸ்டோஸ்டிரோன், ஆண்ட்ரோஜென் போன்ற ஆண் ஹார்மோன்களும் குறைந்த அளவில் சுரக்கும்.
பி.சி.ஓ.எஸ், பி.சி.ஓ.டி, ஃபைப்ரோசிஸ்டிக் டிசீஸ் ஆஃப் பிரெஸ்ட், ஃபைப்ராய்டு யுட்ரஸ், அடினோமையோசிஸ், ஃபைப்ராய்டு அடினோமா ஆஃப் பிரெஸ்ட் போன்ற ஹார்மோன் தொடர்பான பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு ஆண்ட்ரோஜென் ஹார்மோனின் சுரப்பு அதிகரித்து, முகத்தில் தேவையற்ற முடி வளர்ச்சி ஏற்படுகிறது. இந்த நோய்கள் ஏற்கனவே ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டிருப்பதால், இர்சூடிக் ஃபீச்சர்ஸ் ஏற்படுவது இயல்பு.
தேவையற்ற முடிகளை நீக்க வீட்டு வைத்தியங்கள்:
ஆண்ட்ரோஜென் ஹார்மோன் அதிகரிப்பால் ஏற்படும் இந்த முடி வளர்ச்சியை நீக்க சில நம்பிக்கைக்குரிய வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி இப்போது காண்போம்.
KKR காம்பினேஷன்: குப்பைமேனி, கஸ்தூரி மஞ்சள், ரோஸ் வாட்டர்
அரை டீஸ்பூன் குப்பைமேனி தூள், அரை டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள், தேவையான அளவு ரோஸ் வாட்டர்.
இந்த மூன்றையும் ஒன்றாகக் கலந்து சந்தனம் போன்ற பதத்தில் ஒரு பேஸ்ட்டாக கலக்கவும்.
இந்த பேஸ்ட்டை மீசை, தாடி, மற்றும் முகத்தில் உள்ள மெல்லிய முடிகள் உள்ள பகுதிகளில் (புருவம் மற்றும் ஹேர்லைன் தவிர்த்து) அப்ளை செய்யவும். இரண்டு மணி நேரம் காய விட்டு, பின்னர் முகத்தைக் கழுவவும்.
பலன்:
இது முடியின் வேர்க்கால்களை (hair follicles) பலவீனப்படுத்தி, அடர்த்தியான முடிகளை மெல்லிதாக்கி, நாளடைவில் உதிர்ந்து போகச் செய்யும். இது நிலத்தில் சாணம் தெளித்து களைகளை அழிக்கும் முறை போன்றது. தொடர்ந்து 3 முதல் 5 மாதங்கள் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.