முகத்தில் முடி இருப்பது உங்கள் அழகை மங்கச் செய்யலாம், எனவே முக முடியை அகற்ற செய்ய ஷேவிங், வாக்சிங் அல்லது லேசர் ஹேர் ரிடக்ஷன் ஆகியவற்றை ஒருவர் தேர்வு செய்யலாம்.
இருப்பினும் பரவலாக நம்பப்படும் சில கட்டுக் கதைகளின் காரணமாக பெரும்பாலான பெண்கள் முகத்தில் ரேஸர் பயன்படுத்துவதில் சந்தேகம் கொண்டுள்ளனர். அதில் ஒரு கட்டுக்கதை, உங்கள் முகத்தில் ஷேவிங் செய்வதால் முடி மீண்டும் அடர்த்தியாக வளரும்.
தோல் மருத்துவர் குர்வீன் வாராய்ச், முக முடியை ஷேவிங் செய்வது பற்றிய பொதுவான கட்டுக்கதைகளை உடைத்தார்.
லேசருக்குப் பிறகு, இது முக முடிகளை அகற்றுவதற்கான மிகவும் திறமையான மற்றும் வசதியான முறைகளில் ஒன்றாகும். முடி வேகமாக வளர்கிறது என்பதல்ல, ஆனால் முடியை வேரோடு பிடுங்காமல் ஷேவிங் செய்வதால், அவை வேக்சிங் அல்லது த்ரெடிங் செய்வதை விட வேகமாக திரும்பி வளரும்.
ஷேவிங் முடியின் தடிமனைப் பாதிக்காது, அது கூந்தலை ஒரு கூர்மையான கோணத்தில் வெட்டுகிறது, அதனால் அது வளரும் போது தடிமனாக இருப்பது போல உணர்கிறது.
ஃபேஸ் ஷேவிங்கின் சில நன்மை தீமைகளை நிபுணர் பட்டியலிட்டார்
நன்மை
முக முடியை ஷேவ் செய்வது தொந்தரவில்லாதது, வசதியாக இருக்கும்.
முடியை அகற்றும் இந்த முறை வாக்சிங் அல்லது த்ரெடிங் போல விலை உயர்ந்ததல்ல, ஒருவர் ஒரு ரேஸர் வாங்கினால் போதும்.
இந்த முறை இறந்த சரும செல்களை அகற்றவும் உதவுகிறது
மிக அதிகமாக முடியைக் கூட இது பராமரிக்கிறது.
பாதகம்
/indian-express-tamil/media/media_files/rN3sPS71f3hFA8RB6MgJ.jpg)
ஷேவிங் செய்வதற்கு முன்னும் பின்னும் உங்கள் சருமத்தை நன்கு மாய்ஸ்சரைஸ் செய்யுங்கள்
இதை அடிக்கடி செய்ய வேண்டும், ஏனெனில் முடிகள் வேரோடு பிடுங்கப்படாது, அதனால் அவை விரைவாக திரும்பி வளரும்.
இது மிகவும் வறண்ட மற்றும் உணர்திறன் வாய்ந்த சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும்.
ஒருவர் முகத்தில் ஷேவிங் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் சரியாக செய்யாவிட்டால் லேசான வெட்டுக்களால் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.
ஃபேஸ் ஷேவிங் செய்ய வசதியாக இருக்கும் எவரும் இதை செய்யலாம் என்றாலும், முக முடி அகற்றும் முறையை யார் பயன்படுத்தலாம் என்பதற்கான சில குறிப்புகளை நிபுணர் பட்டியலிட்டுள்ளார்.
அதிக முக முடி கொண்ட எவரும், இது peach fuzz என்றும் அழைக்கப்படுகிறது
அடர்த்தியான கருப்பு முடி உள்ளவர்கள், ஆனால் லேசர் ஹேர் ரிடக்ஷ்ன் விரும்பாதவர்கள்
வேக்ஸிங் அல்லது லேசர் மூலம் முகப்பரு பாதிப்பு எதிர்கொள்கிறவர்கள்.
இருப்பினும், ரேஸர்களைத் தேர்ந்தெடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். ஏராளமான விருப்பங்கள் இருப்பதால், ஒருவர் குழப்பமடைய நேரிடும். எனவே ராஜேஷ் U பாண்டியா (managing director, KAI India) ஷேவிங் தேவைப்படும் உங்கள் உடலின் பகுதியைப் பொறுத்து, உங்கள் ரேஸர் தேர்வும் மாறுபடும், என்று கூறினார்.
அவை எல் வடிவ மேல்பகுதி மற்றும் நீண்ட கைப்பிடியுடன் வருகின்றன, உங்கள் புருவங்கள் மற்றும் மேல் உதடுகள் உட்பட உங்கள் முகத்தை ஷேவ் செய்யும் போது இது வசதியாக இருக்கும், என்று அவர் கூறினார்.
குறிப்பு
டிரை ஷேவிங் செய்ய வேண்டாம். ஷேவிங் செய்வதற்கு முன்னும் பின்னும் உங்கள் சருமத்தை நன்கு மாய்ஸ்சரைஸ் செய்யுங்கள். எப்போதும் முடி வளரும் திசையில் ஷேவ் செய்யுங்கள், எதிர் திசையில் அல்ல.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“