Facial steaming skincare benefits blackheads Tamil News : பல சரும பராமரிப்பு நடைமுறைகளில் சுத்தப்படுத்துதல் மற்றும் டோனிங் ஒரு முக்கிய அங்கம். உதவக்கூடிய பல DIY ரெமடிஸ் இருந்தாலும், எப்போதும் விவாதத்திற்குரிய ஒன்று முகத்தை ஸ்டீம் செய்வது. பலர் தங்கள் முகத்தை நீராவி செய்வதிலிருந்து விலகி இருக்கும்போது, இந்த செயல்முறை இறந்த சரும செல்களை அகற்றி சருமத்தை ஊட்டமளித்து சுத்தப்படுத்த உதவுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
எனவே, முகத்தை ஸ்டீம் செய்வது ஏன் உங்கள் சரும பராமரிப்பு வழக்கத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று சரும மருத்துவர் நிகேதா சோனாவனே பரிந்துரைக்கிறார்.
“உங்கள் முகத்தை ஸ்டீமிங் செய்வது என்பது சரும நெரிசல் மற்றும் கரும்புள்ளிகளுக்கு மிகவும் பிரபலமான வீட்டு வைத்தியம். நீராவி, இறந்த சரும செல்களை அகற்றவும், ஒட்டும் சருமத்தை உருக்கவும் உதவுகிறது” என்று அவர் இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார். இதனை சரியாகச் செய்தால், சுத்தப்படுத்துவதும் சருமத்தைப் பளபளப்பாக்கும்!
இதனை எப்படி செய்வது?
* உங்கள் சருமம் இருமுறை சுத்தம் செய்வதன் மூலம் தொடங்கவும்.
*இதன் பிறகு, உங்கள் சருமத்தை 10 நிமிடங்களுக்கு மெதுவாக ஸ்டீமிங் செய்யவும்.
*இது முடித்ததும், Clay மாஸ்க் போட்டு 15 நிமிடங்கள் கழித்துக் கழுவவும்.
*மாற்றாக, அரிசி மாவை ஸ்க்ரப்/பேஸ் மாஸ்க்காகப் பயன்படுத்தலாம்.
*பளபளப்பான சருமத்திற்கு சருமத்தின் மேல் கற்றாழை தேய்த்து இந்த செய்முறையை முடிக்கவும்.
இது எப்படி வேலை செய்கிறது?
டாக்டர் சோனாவனே கருத்துப்படி,
*நீராவி உங்கள் சரும துளைகளைத் திறக்கிறது மற்றும் ஆழமான சுத்திகரிப்புக்காக அழுக்கு குவிவதைத் தளர்த்த உதவுகிறது.
* இது கரும்புள்ளிகளை மென்மையாக்குகிறது மற்றும் ஸ்க்ரப்பிங் செய்யும் போது அவற்றை எளிதாகக் கரைக்கும்.
*நீராவி மற்றும் வியர்வையின் அதிகரிப்பு ஆகியவற்றின் கலவை, உங்கள் ரத்த நாளங்களை விரிவுபடுத்துகிறது மற்றும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது என்று டாக்டர் சோனாவனே கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil