தென் ஆப்ரிக்காவில் 6 ஆயிரம் ஆண்டு பழமையான சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக பகிரப்படும் தகவலின் உண்மைத் தன்மையை நியூஸ்மீட்டர் இணைய தளம் சார்பார்த்துள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ்மீட்டர் (Newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கும்பகர்ணனின் வாள் கிடைத்தது என்று ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், “எவ்வளவுதான் இந்து மத அடையாளங்களை உலகம் முழுக்க அழித்து ஒழிக்க நினைத்தாலும் அதன் ஆதாரங்கள் தினம் தோறும் வெளிவந்து கொண்டே தான் இருக்கிறது” என்ற கேப்ஷனுடன் தென் ஆ ப்ரிக்காவின் சுத்வாரா என்ற குகையில் 6 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது என்று காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை சரிபார்ப்பு
இந்த நிலையில், தென் ஆப்ரிக்காவில் 6 ஆயிரம் ஆண்டு பழமையான சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக பகிரப்படும் தகவலின் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் மீட்டர் ஆய்வு செய்துள்ளது. அதன் ஆய்வில் இந்தத் தகவல் தவறானது என்றும், இவ்வாறான சிவலிங்கம் ஏதும் கண்டெடுக்கப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
வைரலாகும் தகவலின் உண்மை தன்மையைக் கண்டறிய அது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்துள்ளனர். அப்போது, சுத்வாரா (Sutwara) என்ற பெயரில் தென் ஆப்ரிக்காவில் குகையே இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும், சுத்வாலா (Sutwala) என்ற பெயரில் தான் இம்புமலாங்கா என்ற மாகாணத்தில் குகைகள் இருப்பது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து, 6 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் சுத்வாலா குகையில் கண்டெடுக்கப்பட்டதா என்று அதன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருந்த மின்னஞ்சலுக்கு விளக்கம் கேட்டு நியூஸ் மீட்டர் மின்னஞ்சல் அனுப்பி இருந்தது. அதற்கு, இந்தத் தகவல் தவறானது என்று விளக்கம் அளித்துள்ளனர்.
இறுதியில், நியூஸ்மீட்டர் தேடலின் முடிவில் தென் ஆப்ரிக்காவின் சுத்வாரா என்ற குகையில் 6 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் தவறானது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கபட்டுள்ளது.
இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ்மீட்டர் (Newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
https://newsmeter.in/fact-check-tamil/6000-old-shiva-lingam-found-at-south-africa-739324?infinitescroll=1
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.