செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் உடலுக்கு நல்லதா? உண்மையை விளக்கும் டாக்டர் அருண் குமார்
செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் உடலுக்கு நல்லது என்று கூறப்படும் நிலையில், அதன் உண்மைத் தன்மை குறித்து அறிவியல்பூர்வ ஆதாரங்களுடன் மருத்துவர் அருண் குமார் விளக்கம் அளித்துள்ளார். அவற்றை தற்போது காணலாம்.
செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது என்று தற்போது பலரும் கூறுகின்றனர். இதன் காரணமாக செம்பு வாட்டர் பாட்டிலின் விற்பனையும் அதிகரித்து வருகிறது. ஆனால், உண்மையாகவே இதனை பயன்படுத்துவது உடலுக்கு நன்மையை அளிக்குமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. அதற்கான விடையை மருத்துவர் அருண் குமார் தெரிவித்துள்ளார்.
Advertisment
உதாரணத்திற்கு இரும்புச் சத்து பற்றாக்குறையினால் அனிமியா போன்ற நோய்கள் உருவாகிறது. இதேபோல், உடலில் இருக்கும் தாது பொருட்களின் பற்றாக்குறையின் காரணமாகவும் பல நோய்கள் வருகின்றன. ஆனால், செம்பு சத்துப் பற்றாக்குறையினால் உருவாகும் நோய் என எதுவும் இல்லை என்று மருத்துவர் அருண் குமார் கூறுகிறார்.
குறிப்பாக, மிக மிக அரிதான ஒரு மரபணு நோய் மட்டுமே இருப்பதாக மருத்துவர் அருண் குமார் தெரிவித்துள்ளார். மென்கீஸ் எனப்படும் நோயும் மிக அரிதாக தான் ஏற்படும் என்று அவர் கூறுகிறார். அந்த வகையில், காய்கறிகள், கீரைகள் மற்றும் நட்ஸ் வகைகள் ஆகியவற்றில் செம்பு சத்து இருக்கிறது. உடலுக்கு, செம்பு சத்தின் தேவையும் குறைவு தான். இவை எளிதாக உடலுக்கு கிடைத்து விடும்.
எனவே, செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்தால் அவை கரைந்து செல்வதற்கான சாத்தியக் கூறுகளும் இல்லை. இதனால் நம் உடலுக்கு கூடுதலாக எந்த விதமான பயன்களும் கிடைப்பதில்லை என மருத்துவர் அருண் குமார் தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
நன்றி - Doctor Arunkumar Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.