Advertisment

உங்க உடல் நலத்துக்கு இவ்வளவு ஆபத்தா? போலி பன்னீரை கண்டறிவது எப்படி?

இன்று "போலி பனீர்" தயாரிப்புகள் உணவு சந்தையில் ஊடுருவி வருகின்றன, இந்த தரக்குறைவான பொருட்கள், சுகாதார அபாயங்களை ஏற்படுத்துகின்றன.

author-image
WebDesk
New Update
Panneer

Fake paneer is infiltrating the food market: How do you recognise it?

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பனீர் புதரச் சத்தும் கால்சியம் சத்தும் நிறைந்தது. சைவ விரும்பிகளுக்கு, பாலில் இருந்து பெறப்படும் பனீரின் மூலம் போதுமான புரதச் சத்து கிடைக்கும்.

Advertisment

பனீரில் கேசின் என்ற புரதம் மிக அதிகம். 100 கிராம் பனீரில் 12.4 கிராம் கார்போஹைட்ரேட் சத்து இருக்கும். பனீரில் கால்சியம் சத்தும் அதிகம் என்பதால் அதன் மூலம் பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியமும் மேம்படுகிறது. பனீரில் பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் வைட்டமின் சத்துகளும் இருக்கின்றன.

ஆனால் இன்று "போலி பனீர்" தயாரிப்புகள் உணவு சந்தையில் ஊடுருவி வருகின்றன, இந்த தரக்குறைவான பொருட்கள், சுகாதார அபாயங்களை ஏற்படுத்துகின்றன.

இப்பிரச்னைக்கு தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஏப்ரல் தொடக்கத்தில், நொய்டாவில் இருந்து வெளியான அறிக்கைகள், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) பரிசோதித்த 168 உணவுப் பொருட்களில் 47 பனீர் மற்றும் கோயா பொருட்கள் மாசுபட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.

இத்தகைய சூழ்நிலைகளில், போலி மற்றும் உண்மையான பனீரை எவ்வாறு கண்டறிவது? உணவியல் நிபுணர் தீபாலி ஷர்மாவின் (clinical nutritionist at the CK Birla Hospital, Delhi) கூற்றுப்படி, அதன் தோற்றத்தையும் அமைப்பையும் ஆய்வு செய்வதன் மூலம் நீங்கள் தொடங்கலாம்.

அமைப்பு

உண்மையான பனீர் மென்மையாகவும், எளிதில் உடையக்கூடியதாகவும் இருக்க வேண்டும், அதேசமயம் செயற்கை பனீர் பெரும்பாலும் ரப்பர் போன்று அல்லது அதிக மிருதுவாகத் தோன்றும்.

வாசனை

பனீரை முகர்ந்து பாருங்கள். உண்மையான பனீரில் லேசான பால் போன்ற நறுமணம் இருக்கும், அதே சமயம் போலி பனீரில் இது இல்லாமல் இருக்கலாம் அல்லது ரசாயன வாசனையை வெளியிடலாம்.

சுவை

சுவை நம்பகத்தன்மையையும் குறிக்கலாம்; உண்மையான பனீர் சுத்தமான, பால் போன்ற சுவையைக் கொண்டுள்ளது, அதே சமயம் போலி பனீர் செயற்கையாகச் சுவைக்கலாம்.

மாய்ஸ்சர்

உண்மையான பனீர் பொதுவாக அதிக ஈரப்பதம் கொண்டது, அழுத்தும் போது மோர் வெளியிடுகிறது, அதேசமயம் செயற்கை பனீர் உலர்ந்ததாக இருக்கும்.

சமையல் செயல்முறை

சமைக்கும் போது, ​​உண்மையான பனீர் பழுப்பு நிறமாகி அதன் வடிவத்தை அப்படியே வைத்திருக்கிறது, அதே சமயம் போலி பனீர் ரப்பராக மாறலாம், உருகலாம் அல்லது சிதைந்துவிடும்.

இறுதியாக, நீங்கள் நம்பகமான ஆதாரங்கள் அல்லது புகழ்பெற்ற பிராண்டுகளில் இருந்து பனீரை வாங்குவதை உறுதிசெய்து, செயற்கை தயாரிப்புகளைத் தவிர்க்க, பேக்கேஜிங்கில் தரச் சான்றிதழ்கள் அல்லது பாதுகாப்பு அடையாளங்களைச் சரிபார்க்கவும், என்று சர்மா மேலும் கூறினார்.

போலி பனீர் சாப்பிடுவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் என்ன?

செயற்கை பனீரை உட்கொள்வதால் வயிற்று உபாதை, வயிற்றுப்போக்கு, வாந்தி, குமட்டல் போன்றவை ஏற்படும்.

நீண்ட கால நுகர்வு உங்கள் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களையும் பாதிக்கலாம், ஏனெனில் செயற்கை பனீரில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் மற்றும் பால் பவுடர் இருக்கலாம், இது உங்கள் இதய ஆரோக்கியத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று ஷர்மா மேலும் கூறினார்.

எனவே, செயற்கை பனீரைத் தவிர்த்து, முடிந்தவரை புதிய, இயற்கையான பனீரைத் தேர்ந்தெடுப்பது நல்லது. நீங்கள் அதை வீட்டில் கூட செய்ய ஆரம்பிக்கலாம்.

Read in English: Fake paneer is infiltrating the food market: How do you recognise it?

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment