ரொம்ப பிரபலமான சோமாஸ் இப்படி செய்து பாருங்க. மிகவும் ருசியான ஸ்நாக்ஸ் இது.
தேவையான பொருட்கள்
ஒரு கப் மைதா மாவு
உப்பு
2 ஸ்பூன் ரவை
2 ஸ்பூன் சூடான எண்ணெய்
பொட்டுக்கடலை ¼ கப்
அரை கப் ரவை
1 ஸ்பூன் நெய்
அரை கப் சர்க்கரை
2 ஏலக்காய்
1 முழுத் தேங்காய்
பொறிக்கும் அளவுக்கு எண்ணெய்
செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவை சேர்த்துகொள்ளவும். அதில் உப்பு, ரவையை சேர்த்துகொள்ளவும். தொடர்ந்து அதை கலந்து விடவும். தொடர்ந்து அதில் சூடான எண்ணெய் சேர்க்கவும். இதில் தண்ணீர் சேர்த்து மாவாக பிசைந்து கொள்ளவும். மாவு பிசைந்த பிறகு ஊற வைக்கவும். தொடர்ந்து அடுப்பில் பாத்திரம் வைத்து பொட்டுக்கடலை வறுக்க வேண்டும். இதை தனியாக எடுத்து வைத்துகொள்ளவும். தொடர்ந்து ரவையை வறுக்க வேண்டும். அப்போது நெய்யை சேர்த்து கொள்ளுங்கள். இதையும் தனியாக எடுத்து வைத்துகொள்ளவும். தொடர்ந்து சர்க்கரையை, ஏலக்காய் மிக்ஸியில் அரைத்துகொள்ள வேண்டும். தொடர்ந்து தேங்காய்யை மிக்ஸியில் அரைத்து கொண்டு, அதை நன்றாக வறுக்க வேண்டும்.
தற்போது அரைத்த பொட்டுக்கடலை, சர்க்கரை, வறுத்த ரவை, தேங்காய் ஆகியவற்றை கலந்து வைக்க வேண்டும். தற்போது ரெடி செய்து வைத்து உள்ள மாவை சப்பாத்தி போல் இட வேண்டும். சோமாஸ் செய்யும் அச்சு கிடைக்கும். அதில் சப்பாத்தி போல் இட்ட மாவை வைத்து, அதில் பூரணத்தை வைக்கவும். தொடர்ந்து இந்த அச்சை மூடினால் சோமாஸ் வடிவம் கிடைத்துவிடும். இதை எண்ணெய்யில் சேர்த்து பொறித்து எடுக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“