Famous Temples in India: ஆன்மீகத்திற்கு பெயர் போன நாடு இந்தியா. அனைத்து மதங்களையும் சமப்படுத்தி செல்வதே இந்தியாவின் நோக்கம். அதற்கேற்ப இந்தியாவில் அனைத்து மத வழிபாடும் நீடூடி செழித்து நடக்கின்றன. ஆனால் ஆதி மதமாக கருதப்படும் இந்து மதத்தில் நிறை கோயில்களை நேர்த்தியாகவும் பிரம்மாண்டமாகும் கட்டி வைத்திருந்தனர்.
எனவே, ஆயிரம் வருட பழமையான கோயில்கள் பற்றி தெரிந்துகொள்வோம்.
அமர்நாத் கோவில் இந்தியாவின் பிரதான யாத்ரீக ஸ்தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது ஸ்ரீநகரிலிருந்துஇ சுமார் 145 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சுமார் 4175 அடி உயரத்தில் அமைந்துள்ள இத்தலம் இந்துக்கள் வணங்கும் சிவபெருமானின் பக்தர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு இயற்கையாக அமையப்பெற்றுள்ள பனி சிவலிங்கம்இ முக்கிய ஈர்ப்பு அம்சமாக உள்ளது. அமர்நாத் என்றால் அழிவற்ற கடவுள் என்பதைக் குறிக்கும் .
தமிழ்நாட்டில் எத்தனை கோயில்கள் இருந்தாலும் தஞ்சை பெரிய கோயிலுக்கு ஈடுடாக எந்த கோவிலும் இல்லை. வட நாட்டில் பல வெற்றிகளை பெற்று வந்த ராஜராஜ சோழன் தான் வழியில் கண்ட பல்வேறு சிற்பக்கலை மரபுகளைச் சேர்த்து கோயிலாக கட்டியதே தஞ்சை பெரியார். வார்த்தைகளில் விவரிக்க முடியாத நுண்ணிய வடிவமைப்பு துல்லியம் பொறியியல் நுணுக்கங்கள் துளியும் பிசகாத கணக்கீடுகள் என அறிவியல் பூர்வமான நுட்பங்கள் இந்த ஒட்டுமொத்த கோயிலின் உருவாக்கத்தில் நிரம்பியுள்ளன.
இந்திய சிற்பக் கலையின் பொக்கிஷமாக போற்றப்படும் எல்லோராவின் தொன்மையான குகைக் கோயில்கள் மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்துள்ளது. யுனேஸ்கோ அமைப்பால் பாதுகாடக்கப்பட வேண்டியதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த எல்லோரா குகைக் கோயில்கள் ராஷ்டிரகூடர்களால் கட்டப்பட்டுள்ளது.
சோழமண்டல் கலைக்கிராமம் மாமல்லபுரத்திலிருந்து 30 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு ஓவியங்கள் கைவினைப்பொருட்கள் மற்றும் சிற்பங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.பஞ்ச பாண்டவ ரதங்கள் வராக மண்டபம் மற்றும் கடற்கரை கோயில் ஆகியவை இங்குள்ள குறிப்பிடத்தக்கவை
அத்துடன் சோம்நாத் மஹாதேவ் கோயில் குஜராத்தின் சோம்நாத்தில் அமைந்துள்ளது. இது தெய்வீக சந்நிதி என்றும் அழைக்கப்படுகின்றது. இக்கோயில் சுமார் ஏழு முறை அழிவிற்கு உள்ளாகிய போதும் அது புணரமைப்பின் மூலம் பாதுகாக்கப்படுகின்றது.
தலக்காடு நகரத்துக்கு விஜயம் செய்யும் பக்கதர்கள் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள சோமநாதபுரம் கிராமத்துக்கும் பயணிக்கலாம். இந்த கிராமம் இங்குள்ள ஷீ வேணுகோபால ஸ்வாமி கோயில் மற்றும் ஸ்ரீ சென்னக்கேசவா கோயிலுக்காக பிரசித்தி பெற்றுள்ளது.
கேதார்நாத் கோயில் இந்தியாவில் ஹிந்துக்களின் முக்கியமான புனித யாத்திரைஸ்தலமாக புகழ் பெற்றிருக்கிறது. இது இமயமலைத்தொடர்களின் அங்கமான கேதார்நாத் மலைகளில் அமைந்துள்ளது.
சிவாலயமாக வணங்கப்படும் கும்பகோணத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் மாசிமக விழாவும்இ 12 ஆண்டுகளுக்கொருமுறை மகாமகப் பெருவிழாவும் இக் கோவிலில் கொண்டாடப்படுகின்றன.அத்தோடு இக் கோவில் 1300 ஆண்டுகள் பழமையானதென நம்பப்படுகிறது. மேலும் இடைக்காலச் சோழர்கள் இந்நகரத்தை ஆண்டபொழுதிலிருந்து இக்கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவபெருமான் ஆதி கும்பேஸ்வரர் என்னும் பெயருடன் வழிபடப்படுகிறார்.
கி பி 1053 இல் சோழர்களால் வேழமலையில் கட்டப்பட்ட ஜகத்பிதா பிரம்மா குகைவரைக் கோயில் கிழக்கு மேற்கே விரிவாக்கப்பெற்றது என கல்வெட்டுகளின் மூலம் அறியபடுகிறது. இக் கோயிலை முதலாம் குலோத்துங்க சோழனும் விக்கிரம சோழனும் விரிவுபடுத்தினர் என்றும் 14 நூற்றாண்டில் தாயார் சன்னதியும் அபிஷேக மண்டபமும் அமைக்கப்பட்டதெனவும் கூறப்படுகின்றது. சோழர்களின் வீழ்ச்சிக்குபின் விஜயநகர அரசர்கள் கிழக்கு கோபுரம் ஊஞ்சல் மண்டபம் மற்றும் கல்யாண மண்டபங்களை கட்டியதாக கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.