நமது வீட்டின் சமையலறை ஃபேன் மற்ற அறைகளில் இருக்கும் ஃபேன்களை விட மிக அதிகமாக அழுக்காகும். ஹால் அல்லது படுக்கை அறைகளில் இருக்கும் ஃபேன்களில் தூசி மட்டுமே படியும். அவற்றை ஒரு ஈரத்துணியால் அல்லது சாதாரண துண்டால் துடைத்தாலே போதும், ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்குள் சுத்தப்படுத்திவிடலாம். ஆனால் சமையலறையில் இருக்கும் ஃபேன், குறிப்பாக எக்ஸாஸ்ட் ஃபேன், சுத்தப்படுத்துவது மிகவும் கடினம். எண்ணெய் பிசுக்கு, கறைகள் படிந்திருப்பதால் உடனடியாக சுத்தம் செய்ய முடியாது.
Advertisment
இந்த எண்ணெய் பிசுக்குக் கறைகளை எந்த ஒரு ஸ்க்ரப்பரையும் பயன்படுத்தாமல், சிரமப்படாமல் எப்படி எளிதாகச் சுத்தம் செய்யலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
Advertisment
Advertisements
மைக்ரோஃபைபர் துணிகள் - 4 தண்ணீர் - 2 கப் வினிகர் - 1 கப் பேக்கிங் சோடா (அப்ப சோடா) - 3 முதல் 4 டேபிள்ஸ்பூன் டிஷ் வாஷிங் லிக்விட் அல்லது டிட்டர்ஜென்ட் பவுடர் - கால் அல்லது அரை டீஸ்பூன்
சுத்தம் செய்யும் முறை
ஒரு பெரிய டப்பில் இரண்டு டம்ளர் தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள். அத்துடன் ஒரு கப் வினிகர் சேர்த்துக்கொள்ளுங்கள். பிறகு, மூன்று முதல் நான்கு டேபிள்ஸ்பூன் பேக்கிங் சோடா (நாம் வீட்டில் பயன்படுத்தும் அப்பச்சோடா) சேர்க்கவும். பேக்கிங் சோடா சேர்த்ததும், லேசாக பொங்கி வரும். இதை நன்றாக கரைத்துவிடுங்கள், ஏனெனில் அப்பச்சோடா நன்றாக கரைய வேண்டும். இதனுடன் ஒரு அரை டீஸ்பூன் அல்லது கால் டீஸ்பூன் டிஷ் வாஷிங் லிக்விட் அல்லது டிடர்ஜென்ட் பவுடர் சேர்த்துக்கொள்ளுங்கள்.
இந்த கரைசலை நன்றாக கலந்த பிறகு, நாம் எடுத்து வைத்திருக்கும் நான்கு துணிகளையும் (ஃபேனின் நான்கு பிளேடுகளுக்காக) இதில் ஐந்து நிமிடம் ஊற விடுங்கள். இந்த துணிகள் வினிகர் மற்றும் பேக்கிங் சோடா கரைசலை நன்றாக உறிஞ்சி எடுத்துக்கொள்ளும்.
துணிகளில் தண்ணீர் அதிகம் இருக்கக்கூடாது; அதே சமயம், மிகவும் காய்ந்திருக்கவும் கூடாது. லேசாக பிழிந்து, துணிகளை தனியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். மீதமுள்ள கரைசலை ஒரு சிறிய கிளாஸில் ஊற்றி தனியே வைத்துக்கொள்ளுங்கள், இது தேவைப்படும்.
எடுத்து வைத்திருந்த நான்கு தனித்தனி துணிகளையும் ஃபேனின் ஒவ்வொரு பிளேடிலும் போடவும். துணியின் நடுவில் ஃபேனின் பிளேடை வைத்து, இருபுறமும் மடித்து, துணியை பிளேடில் பொருத்தவும். துணியின் ஒரு முனையை உள் பக்கமாக சரி செய்யவும். மறுபுறம் தொங்கும் துணியை பிளேடின் பின் பக்கமாக செருகவும். மீதமுள்ள துணியை ஃபேனின் பிளேடின் மேல் பக்கமாக போட்டுவிடுங்கள்.
துணி கீழே விழுந்துவிடக்கூடாது என்பதற்காக, துணி காயப்போடும் கிளிப்களைப் பயன்படுத்தலாம்.
சரியாக ஆறு அல்லது ஏழு மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊறவிட்டு, காலையில் நீங்கள் எடுக்கும்போது, துணிகளை லேசாக தேய்த்து கொடுங்கள். துணியை எடுத்தாலே போதும், அதில் இருக்கும் அழுக்கு அனைத்தும் வந்துவிடும். தனியாக நீங்கள் ஸ்க்ரப் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.
இதேபோல எக்ஸாஸ்ட் ஃபேனையும் சுத்தம் செய்யலாம். முக்கியமாக, 40 வயது, 50 வயது அல்லது 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மேல் ஏறி நின்று ஃபேன் தேய்த்து ஸ்க்ரப் செய்வதற்கு மிகவும் சிரமப்படுவார்கள். இந்த மாதிரி செய்யும்போது, அவர்கள் எந்த ஒரு முயற்சியும் அதிகமாக போடாமல் எளிதாக சுத்தம் செய்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.