காலி வாட்டர் பாட்டில் இருந்தா இப்படி செய்து பாருங்க… 30 செகண்டில் ஃபேன் கிளீன் பண்ணலாம்!
காலி வாட்டர் பாட்டில் வைத்து வெறும் 30 விநாடிகளில் எப்படி ஃபேன் சுத்தம் செய்வது என்று பார்ப்போம். நம்மில் பலருக்கும் வீட்டில் ஃபேன் துடைப்பது என்பது சற்று கடினமான வேலையாகவே தோன்றும். ஸ்டூல் போட்டு ஏறி, ஒவ்வொரு இறக்கையாக கஷ்டப்பட்டு துடைப்போம். சில சமயங்களில் தூசியானது நம் மீதும், அறையெங்கும் பரவிவிடும். இந்தப் பிரச்னைகளுக்கு எளிய தீர்வு உள்ளது.
காலி வாட்டர் பாட்டில் வைத்து வெறும் 30 விநாடிகளில் எப்படி ஃபேன் சுத்தம் செய்வது என்று பார்ப்போம். நம்மில் பலருக்கும் வீட்டில் ஃபேன் துடைப்பது என்பது சற்று கடினமான வேலையாகவே தோன்றும். ஸ்டூல் போட்டு ஏறி, ஒவ்வொரு இறக்கையாக கஷ்டப்பட்டு துடைப்போம். சில சமயங்களில் தூசியானது நம் மீதும், அறையெங்கும் பரவிவிடும். இந்தப் பிரச்னைகளுக்கு எளிய தீர்வு உள்ளது.
நம்மில் பலருக்கும் வீட்டில் ஃபேன் துடைப்பது என்பது சற்று கடினமான வேலையாகவே தோன்றும். ஸ்டூல் போட்டு ஏறி, ஒவ்வொரு இறக்கையாக கஷ்டப்பட்டு துடைப்போம். சில சமயங்களில் தூசியானது நம் மீதும், அறையெங்கும் பரவிவிடும். இந்தப் பிரச்னைகளுக்கு எளிய தீர்வு உள்ளது. தேவையற்ற ஒரு பிளாஸ்டிக் பாட்டிலைக் கொண்டு, ஃபேன் கிளீனரை எளிதாக செய்யலாம். க்ரேசிஇந்தியன்ஹேக்கர் என்ற யூடியூப் சேனலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisment
தேவையான பொருட்கள்: பழைய பிளாஸ்டிக் பாட்டில் (அரை லிட்டர் அல்லது ஒரு லிட்டர்), கத்தி, மைக்ரோஃபைபர் துணி அல்லது ஃபேன் துடைக்கப் பயன்படுத்தும் வேறு ஏதேனும் காய்ந்த துணி (2), மாப் ஸ்டிக் (Mop Stick)
செய்முறை: முதலில், ஒரு பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்துக்கொள்ளுங்கள். அரை லிட்டர் பாட்டில் என்றாலும் பரவாயில்லை, ஆனால் ஒரு லிட்டர் பாட்டில் என்றாலும் பரவலாயில்லை. பாட்டிலின் முன்பக்கத்திலும் பின்பக்கத்திலும், சுமார் 15 செ.மீ. நீளத்திற்கும், 5 செ.மீ. அகலத்திற்கும் கத்தியால் வெட்டி தனியாக எடுக்க வேண்டும். கத்தியை லேசாக சூடு படுத்தினால் வெட்ட எளிதாக இருக்கும். உங்கள் வீட்டு ஃபேன் இறக்கைகளின் அளவைப் பொறுத்து இந்த அளவுகளை மாற்றிக்கொள்ளலாம். பெரிய ஃபேனாக இருந்தால், 17-18 செ.மீ நீளமும், 8-9 செ.மீ அகலமும் எடுத்துக்கொள்ளலாம்.
முக்கியமாக, முன்பக்கமும் பின்பக்கமும் ஒரே அளவில் வெட்ட வேண்டும். பாட்டிலின் மையபகுதியில் ஒரு சிறிய துளை போட வேண்டும். இந்தத் துளை, நமது ஆள்காட்டி விரல் லேசாக வெளியே வரும் அளவிற்கு இருந்தால் போதுமானது. அடுத்து, 2 மைக்ரோஃபைபர் துணிகளை எடுத்துக்கொள்ளுங்கள். காய்ந்த துணியாக இருப்பது முக்கியம்.
Advertisment
Advertisements
அப்போதுதான் தூசி எளிதாக உதிரும். ஈரமாக இருந்தால் ஃபேன் இறக்கைகளிலேயே தூசி ஒட்டிக்கொள்ளும். பாட்டிலில் வெட்டிய 2 பக்கங்களிலும், ஒவ்வொரு துணியையும் நன்றாகச் செருகிவிடுங்கள். இப்போது பார்க்கும்போது, பாட்டிலின் நடுவே துளையும், இருபுறமும் துடைக்கத் துணியும் இருக்கும்.
வீட்டில் உபயோகப்படுத்தும் மாப் குச்சியின் மேல் பகுதியை கழற்றி எடுத்து, பாட்டிலின் நடுவில் நாம் போட்ட துளையில் நன்றாகச் சொருகிப் பொருத்தி விடுங்கள். அவ்வளவுதான்! நமது ஃபேன் கிளீனர் தயார். இப்போது நீங்கள் தரையில் நின்றுகொண்டே, இந்த கிளீனரை ஃபேன் இறக்கைகளில் மாட்டி, முன்னும் பின்னுமாக இழுத்தால் போதும்.
இறக்கைகளின் மேல் மற்றும் கீழ் இருக்கும் தூசிகள் அனைத்தும் அழகாக உதிர்ந்துவிடும். தரையில் தூசி பரவாமல் இருக்க, ஃபேனுக்குக் கீழே ஒரு பழைய துணி அல்லது பேப்பரை விரித்துக் கொள்ளலாம். முதலில் காய்ந்த துணியால் துடைத்துவிட்டு, தேவைப்பட்டால் அதே துணிகளை நீரில் நனைத்து, நன்றாகப் பிழிந்துவிட்டு 2வது முறை துடைத்தால் ஃபேன் பளிச்சென்று ஆகிவிடும்.
இந்த முறையில் நீங்கள் ஃபேன் துடைக்கும்போது, பாட்டிலுக்குள் வைத்த துணியிலேயே நிறைய தூசிகள் சேகரமாகியிருப்பதை நீங்கள் காணலாம். அந்தத் தூசியை எளிதாகத் தட்டிவிட்டு, பாட்டிலையும் துணியையும் அடுத்த முறை பயன்படுத்துவதற்காக பத்திரப்படுத்திக் கொள்ளலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news