/tamil-ie/media/media_files/uploads/2020/08/5-2.jpg)
farina azad instagram serial artist farina
farina azad instagram serial artist farina: சன் டிவி கிச்சன் கலாட்டா ஷோவை சாப்பாட்டுக்காக பாக்கறாங்களோ இல்லையோ ஃபரீனாவோட ஆடைகளுக்காகவே பார்த்த ரசிகர்கள் கூட்டம் உண்டு. சன் டிவியில் ஒளிப்பரப்பாகிய கிச்சன் கலாட்டா சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஃபரீனா அணிந்து வந்த ஆடைகளுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு.
குண்டு கண்ணத்தில் அழகாய் குழி விழ கண்களை உருட்டி உருட்டி க்யூட்டாக பேசும் ஃபரினா சாதாரணமாக உடுத்தும் புடவையை கூட கலக்கல் ப்ளவுஸ் போட்டு கலர்ஃபுல் காஸ்ட்யூமாக மாற்றி விடுவார்.
சின்னத்திரையில் பிரபல நட்சத்திர தொகுப்பாளினியாக இருந்து வந்த பரீனா ஆசாத். இவர் கிச்சன் கலாட்டா, செலிபிரிட்டி இண்டர்வியூ, சினிமா ஸ்பெஷல் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.
ஆரம்பம் முதலே நிறைய சீரியல் வாய்ப்புகள் ஃபரீனாவின் கதவை தட்ட, அவற்றை நிராகரித்திருக்கிறார் ஃபரீனா. பின்னர் கலர்ஸ் தமிழின் ‘தறி’ சீரியலும், விஜய் டிவி-யின் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலும் ஃபரீனாவின் மனதை மாற்றியிருக்கின்றன. இவற்றில் ’தறி’ சீரியலில், வாய் பேச முடியாத வாணியாகவும், ‘பாரதி கண்ணம்மா’வில் வெண்பா என்ற வில்லியாகவும் மிரட்டி வருகிறார்.
இந்த சலுகைக்க HDFC வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே!
ப்ளஸ் 1 படிக்கும் போதே நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியை தொடங்கிய ஃபரினா, ராஜ் டிவி, புதுயுகம், ஜீ தமிழ் சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாராக இருந்து இப்போது சன் டிவியில் கிச்சன் கலாட்டா தொகுத்து வழங்கி வருகிறார். எல்லா சேனல்களிலுமே சமையல் நிகழ்ச்சிதான் தொகுத்து வழங்கியிருக்கிறாராம்.
‘`காதல் அழிவதில்லை படத்தை என்றைக்குப் பார்த்தேனோ... அன்றிலிருந்தே நான் சிம்பு ரசிகைதான். சிம்பு பெயரைக் கேட்டாலே ‘ஒன்றரை டன் எனர்ஜி’ கிடைக்கும். படிக்கிற காலத்தில் என் அறை முழுக்க சிம்பு ஸ்டிக்கர்ஸாக ஒட்டிவைத்திருப்பேன். டி.வி-யில் சிம்பு படம் வந்தாலே ஸ்கிரீனுக்கு முத்தம் கொடுக்கிற அளவு சீரியஸான சிம்பு ரசிகை நான்! இது பிரபல இணையதளத்தில் ஃபரினா அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.