புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர், வெண்டல் ரோட்ரிக்ஸ் (59 வயது) பிப்ரவரி 12, 2020 அன்று கோவாவில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவரது மரணம் குறித்த திடீர் செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக பேஷன் துறையில் இருப்பவர்களுக்கும், பாலிவுட் பிரபலங்களுக்கும் வெண்டலின் மறைவு மீளா துயரை உண்டாக்கியிருக்கிறது.
Advertisment
'கமிட்டட்'கள் மிஸ் பண்ணாம பாக்க வேண்டிய 10 தமிழ் படங்கள்!
பிரபலங்கள், அனுஷ்கா ஷர்மா முதல் மலைக்கா அரோரா வரை, தங்களின் மரியாதைக்குரிய வடிவமைப்பாளர் வெண்டலுடன் தங்களின் பசுமையான நிணைவுகளையும், வருத்தத்தையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
”வெண்டல் ரோட்ரிக்ஸ் தூக்கத்தில் காலமானார் என்ற சோகமான செய்தியைக் கேட்டு தான் நான் கண் விழித்தேன். அவர் ஃபேஷனில் மிகவும் பிரபலமான வடிவமைப்பாளர்களில் ஒருவராகவும் எல்.ஜி.பி.டி உரிமைகளுக்கான போராளியாகவும் இருந்தார். பெங்களூரில் ஒரு பேஷன் ஷோவில் என்னைப் பார்த்ததும், மும்பையில் அவரது பேஷன் வீக் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள எனக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தார். 18 வயதில் பெங்களூரிலிருந்து மும்பைக்குச் செல்ல எனக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் வர அவரும் ஓர் காரணம். இளைப்பாருங்கள் வெண்டல். ஜெரோம் மற்றும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பும் பிரார்த்தனையும்” என நடிகை அனுஷ்கா ஷர்மா தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார்.
A post shared by Malaika Arora (@malaikaaroraofficial) on
எல்லா “அழகான நினைவுகளையும்” நினைவு கூர்ந்த மலைக்கா, “அவர் ஓர் அருங்காட்சியகம். எங்கள் அன்பான வெண்டெல் ரோட்ரிக்ஸ் ஓய்வெடுங்கள். நான் முதலில் உட்கார்ந்து அழுதேன், பின்னர் தனியாக உட்கார்ந்து சிரித்தேன். நாங்கள் பகிர்ந்து கொண்ட அழகான நினைவுகளையும் தருணங்களையும் நினைத்துக் கொண்டேன்” என்றுக் குறிப்பிட்டுள்ளார்.
Goodbye gentle soul. Amazing designer. Friend. Had so much more to do. Died in the place he loved. A home he created for himself and his partner #WendellRodricks
திரைப்பட இயக்குநர் சேகர் கபூர் ட்விட்டரில், “மென்மையான ஆத்மாவுக்கு குட்பை. அற்புதமான வடிவமைப்பாளர். நண்பர். நாங்கள் செய்வதற்கு இன்னும் நிறைய இருந்தது. தான் நேசித்த இடத்திலேயே இறந்திருக்கிறார். அவருக்கும் அவரது பார்ட்னருக்கும் அவர் உருவாக்கிய வீடு அது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Shocked to hear about the demise of #WendellRodricks Condolences to his family and friends, may his soul rest in peace.
”வெண்டெலின் மறைவுச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
Your demise leaves a void in the fashion fraternity that can never be replaced. May you RIP #WendellRodricks. You will be missed.