சென்னை ராமாபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரியில் மனித வள மேம்பாடு மற்றும் பேஷன் டிசைன் துறை சார்பில் ஃபேஷன் ஷோ நடத்தப்பட்டது. இதில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு என இரண்டு பிரிவாக ஃபேஷன் ஷோ நடத்தப்பட்டது.
/indian-express-tamil/media/media_files/2025/04/05/01cN6gHem69YGwswAd6z.jpg)
அதன்படி, 12 வயது வரையிலான சிறுவர் மற்றும் சிறுமியர் ஒரு பிரிவாகவும், கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகள் ஒரு பிரிவாகவும் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவரும் ஒய்யாரமாக நடை போட்டனர். மேலும், 500-க்கும் மேற்பட்ட ஆடைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
/indian-express-tamil/media/media_files/2025/04/05/JHgIVTqIoOn9i8KSOGXb.jpg)
எஸ்.ஆர்.எம் கல்வி குழும தலைவர் R.சிவகுமார், டீன் எஸ். திருமகன், ஜெ. திலீபன், துறை தலைவர் என்.பி. ஸ்வேதா மேனன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.