கோவையில் நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒய்யாரமாக நடை போட்டு வந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
கிராமத்தில் உள்ள மக்கள் நகர கலாச்சாரத்தை பற்றி தெரிந்து கொள்ளும் விதமாகவும் இதற்கு தகுந்தாற் போல் அவர்களை மாற்றி அமைத்து வாழ்க்கையில் சாதனையை நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் கோவை சின்னயம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜெட்ரோ சார்பில் நடைபெற்ற இந்த ஆடை அலங்கார அணிவகுப்பில் மிஸ்டர், மிஸ், மிசெஸ், கிட்ஸ், டீன் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.
இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 60க்கும் மேற்பட்ட குழந்தைகள், பெரியவர்கள், திருநங்கைகள் பங்கேற்றனர். தொடர்ந்து மின்னொளியில் வண்ண வண்ண ஆடைகள் அணிந்து ஒய்யாரமாக நடை போட்டு வந்து பார்வையாளர்களை போட்டியாளர்கள் கவர்ந்தனர். நிகழ்ச்சியை தொடர்ந்து 30 துறைகளை சேர்ந்த சிறந்த சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.





செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“