fashion trends : ஆரம்ப காலங்களில் பேரலல், ஃபிளாட், டைட்ஸ், பெல்ஸ், பேகி, ஜீன்ஸ் என்று ஒரு சுற்று சுற்றி தற்போது பூட்கட் என மீண்டும் பெல்ஸ் காலத்துடன் அடுத்த ரவுண்டுக்குத் தயாராகி வருகிறது ஃபேஷன் உலகம்.
வேறு யாரையும்விட, இளைஞர்களையும் இளம் பெண்களையும் மனதில் கொண்டே ஃபேஷன் டிசைனர்கள் பல ‘அப்டேட்'களைச் செய்துவருகின்றனர்.
என்னதான் ‘கெத்து' காட்டும் புது ‘அப்டேட்' ஆக இருந்தாலும், கொஞ்ச காலத்துக்குப் பிறகு அது எல்லாமே ‘அவுட்டேட்'தானே. திரும்ப, கொசுவர்த்தி சுருளைச் சுத்தி அந்தக் கால ஸ்டைல், டிசைன், கலர் எல்லாம் இந்தக் கால டிரெண்டுக்கு ஏற்ப மாற்றப்பட்டு ‘புது ஃபேஷன்‘ என்ற பெயரோடு சந்தைக்கு வரும்.
இப்படி இருக்கும் ஃபேஷன் உலகில், நாம் அணியும் உடைகளில் எவ்வளவுதான் புதுசு புதுசான விஷயங்கள் வந்தாலும், என்றைக்கும் தன் இடத்தை விட்டுக்கொடுக்காமல் மக்கள் ‘இடையில்' நிற்பது ஜீன்ஸ்தான்!
அதற்கு அடுத்தப்படியான பெண்கள், ஆண்கள் என இருதரப்பினரையும் அதிகளவில் கவர்ந்து வருவது சாட்ஸ் எனப்படும் டவுசர். காலத்துக்கு ஏற்ப ஃபேஷன் உடைகள் மாறிக் கொண்டே செல்லும் இந்த உலகில் டவுசர் பலரின் தேடுதலாக உள்ளது. இந்த டவுசரில் பல வகைகள் உள்ளன. லாங்க், ஷாட், மினி, ஜீன் டவுசர், கார்க்கோ என ரகங்கள் ஏராளம்.
இந்த வகையில் இப்போது லண்டனில் உள்ள பிரபல ஃபேஷன் நிறுவனவத்தால் புதிய டவுசர் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்கள் ஃபேஷன் உலகில் இந்த டவுசர் குறித்த தேடல் தான் அதிகம். டவுசரின் மாடல் புகைப்படமும் இணையத்தில் வைரலாகியது.
2019 ஆம் ஆண்டில் அதிகளவில் ஃபேஷன் பிரியர்களால் விரும்பப்படும் உடையாக இந்த டவுச்சர் கூறப்படுகிறது. ஆனால் உண்மை இதுவல்ல. சில மாதங்களுக்கு முன்பு ஜீன்ஸ் தயாரிப்பில் தனி முத்திரை பதித்த பிரபல நிறுவனம் ஒன்று புது வடிவிலான ஜீன்ஸ் ஒன்றை சந்தையில் இறக்கியது.
இந்த ஜீன்ஸின் புதுமையே ஒருபக்கம் பெரிய வடிவிலான கால்கள் இருக்கும் பக்ல்ச் பேண்ட் மாடல். மற்றொரு புறம் சாதரணமாக இருக்கும். இந்த ஜீன்ஸ் மாடல் பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.
இதோ அந்த ஜீன்ஸின் படங்கள்.