/indian-express-tamil/media/media_files/2025/05/17/eFxwCF4e6nbGWuWRbQFd.jpg)
”ஈரலில் ஒட்டி இருக்கும் கொழுப்பு... இந்த நேர உணவில் மட்டும் அதிக கவனம் வேணும்”
இரவு 11 மணிக்கு மேல் முழிச்சிட்டு இருக்கக் கூடிய நபரா நீங்கள்? உங்களுக்கு ஃபேட்டி லிவர் பிரச்னை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இரவு 9 முதல் 10 மணிக்குள்ளே தூங்க வேண்டும், இரவு உணவில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் மருத்துவர் ஆர்.கே.அக்சயன். ஹெல்த் கேஃப் தமிழ் என்ற யூடியூப் சேனலில் மருத்துவர் ஆர்.கே.அக்சயன் கூறிய தகவல்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஃபேட்டி லிவர் என்றால் என்ன?
ஃபேட்டி லிவர் என்பது அதிகப்படியான மதுபானங்கள் அருந்துவதால் ஏற்படக்கூடியதாகவோ (அ) ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உடற்பருமன், நீரிழிவு நோய் போன்ற நாள்பட்ட பிரச்னைகளால் உண்டாகும். மது அல்லாத ஃபேட்டி லிவர் நோயாகவும் இருக்கலாம். அசைவ உணவு எடுக்கக் கூடிய நபர்களுக்கும் இது ஏற்படுகிறது என்கிறார் மருத்துவர் ஆர்.கே. அக்சயன்.
கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு படிவதால் ஏற்படக்கூடிய நோய் ஃபேட்டி லிவர் (fatty liver) எனப்படும் கொழுப்பு கல்லீரல் நோயாகும். ஆரம்ப கட்டத்தில் இருக்கும்போது நமது ஆரோக்கியத்திற்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதே நேரத்தில் எளிதாக குணப்படுத்தக்கூடிய ஒன்றாகவும் இருக்கும். எனினும், நோய் தீவிரமடைய தொடங்கும்போது கல்லீரலில் வீக்கம் ஏற்பட்டு ஆரோக்கியமான திசுக்கள் சேதமடைந்த திசுக்களால் மாற்றப்பட்டு கல்லீரலின் செயல்பாட்டில் பின்னடைவு ஏற்படும். இதனால் கல்லீரல் மோசமான சேதத்திற்கு உள்ளாகி லிவர் செர்ஹோசிஸ் (liver cirrhosis) ஏற்பட வழிவகைக்கிறது. இந்த நிலை நீடிக்கும்போது கல்லீரல் செயலிழப்பு அல்லது கல்லீரல் புற்றுநோய் உண்டாகலாம்.
ஃபேட்டி லிவர் குறைக்க முடியுமா?
பொறுப்பு துறப்பு:இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.