fathers day wishes : தாயின் அன்புக்கு நிகரானது தந்தையின் பாசம். தாயின் பெருமை குன்றில் ஒளி வீசும் ஜோதி என்றால், தந்தையின் அன்போ, குடத்தில் இட்ட விளக்கு! குழந்தையைக் கருவில் பெற்றெடுப்பது தாய் என்றால், நாள் எல்லாம் நெஞ்சில் சுமப்பவர் தந்தை!
பிள்ளைகளை வளர்ப்பதில் தந்தையரின் பங்கு மகத்தானது. தன் பிள்ளையின் சிரிப்பு, கண்ணீர், மகிழ்ச்சி என அனைத்துத் தருணங்களிலும் பங்கெடுத்துக் கொள்பவர்தான் தந்தை.
ஆண்டுதோறும் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது. முகநூல், வாட்ஸ் ஆப்கள் மூலம் தந்தையர் தினத்திற்கான வாழ்த்துகளும் குறுஞ்செய்திகளும் பரவிவருகின்றன. தந்தையை இழந்த பிள்ளைகளுக்கோ, அது ஒரு துளி கண்ணீராக விழிகளில் பூக்கிறது.குழந்தைகளுக்கு எப்போதும் ஹீரோவாக இருப்பவர் தந்தை. அப்படிப்பட்ட தந்தைகளை அவர்களுக்கான நாளில் மட்டுமில்லை எல்லா நாளும் போற்றினாலும் அது பாராட்டுதலுக்கு உரியது தான்.
அன்னையிடம் நீ அன்பை வாகலாம். தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்.தந்தையர் தினத்தன்று நீங்கள் பெரிய கொண்டாட்டங்களில், ஈடுபட வேண்டுமென்ற அவசியமில்லை. உங்கள் தந்தைக்கு வாழ்த்து தெரிவியுங்கள். அவருடன் சிறிது நேரம் செலவளியுங்கள்.அவரின் மனதிற்கு பிடித்த இடத்திற்கு அழைத்துச் செல்ல முயற்சி செய்யுங்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2019/06/rakul-preet-singh-starts-shooting-for-suriyas-ngk-photos-pictures-stills-5-300x215.jpg)
தனக்கு பிடித்த எவ்வளவோ பொருட்களையும், எத்தனையோ ஆசைகளையும் குடும்ப தேவைகளை காரணம் காட்டி ஒதுக்கி வைத்தவர் உங்கள் தந்தை .எனவே அவரின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி வையுங்கள். உங்கள் தந்தை உங்கள் அருகில் இல்லை என்றால் அவரை அன்றைய தினம் நினைவு கூறுவதே உங்கள் தந்தைக்கு நீங்கள் அளித்த மிகப்பெரிய பரிசு. தாய் நம் உயிர் என்றால், தந்தை நம் உடல். இரண்டில் எது பிரிந்தாலும், நமக்கு வாழ்வில்லை.
தோளில் குடும்பத்தையும, கையில் பிள்ளைகளையும், இதயத்தில் சுகத்தையும், சோகத்தையும் சுமக்கும் நடமாடும் சுமைதாங்கி.தன் பசியை மறந்து குடும்பத்தின் பசி தீர்க்க உழைத்து மகிழ்பவர்! சுகத்தை கொண்டாட முடியாமலும், சோகத்தை சொல்ல முடியாமலும் நெஞ்சாங் கூட்டுக்குள் மறைத்து கொண்டு குடும்ப கூட்டை கட்டிக்காக்கும் அற்புதமானவர்.
வாழ்க்கையில் தந்தை என்ற பட்டத்தை பெற்ற பிறகு அவர் இழப்பது ஏராளம்.ஆனால் பதிலுக்கு அவர்கள் ஏங்குவது பிள்ளைகளின் பாசித்திற்கு மட்டுமே. உங்களுக்காவே உழைக்கும் ஒவ்வொரு தந்தைகளும் ரியல் ஹீரோஸ் தான். நாளைக்கு தந்தையர் தினம் உங்க அப்பாக்கு நீங்க கொடுக்க போகும் சர்பிரைஸ் என்ன?