fathers day wishes by daughters, fathers day News, fathers day News In Tamil, fathers day Tamil News, உலக தந்தையர் தினம், அப்பா, மகள் வாழ்த்து, fathers day special status
Fathers Day: இன்று தந்தையர் தினம். இந்த நாளை உலகின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு தேதிகளில் கொண்டாடுவது வழக்கம். ஆனால் பெரும்பாலான நாடுகளில் இந்த தினத்தை ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்று கிழமை கொண்டாடுவார்கள். ஒவ்வொரு தந்தையும் தங்கள் குழந்தைகளின் வாழ்க்கையில் வகிக்கும் பங்கை மதிக்கும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் தந்தையர் தினம் ஜூன் 21 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
Advertisment
தந்தையர் தினத்தை முன்னிட்டு, குடும்பங்கள் வழக்கமாக தந்தையர்களுக்கு பரிசு பொருட்களை வழங்குவர் அல்லது அவர்களுக்கு பிடித்த உணவுகளை சமைப்பர். இந்த தினத்தின் நினைவாக உங்கள் தந்தைக்கு நீங்களும் ஏதாவது பரிசு வழங்கலாம் என்று நினைத்தால் அதை முடிவு செய்வதற்கான சிறந்த நேரம் இதுதான்.
நீங்கள் உங்கள் தந்தைக்கு பரிசளிக்க, ரூபாய் 2000/- கீழ் உள்ள சில பொருட்களை நாங்கள் பட்டியலிட்டுள்ளோம்
Advertisment
Advertisements
Truly wireless earbuds: Redmi Earbuds S
ரூபாய் 2,000/- க்கு கீழ் இப்போது நிறைய earphones சந்தையில் கிடைக்கிறது. சீனத்து Xiaomi ன் தயாரிப்பான Redmi Earbuds S ம் அதில் ஒன்று. இது ரூபாய் 1,799/- க்கு கிடைக்கிறது. ஸ்டைலாக இருக்கும் இந்த சாதனம் வியர்வை மற்றும் தண்ணீர் ஆகியவற்றால் பாதிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் ஏற்றினால் 12 மணி நேரம் நிலைத்திருக்கும் தன்மை உடையது.
Trimmer: Syska HT333K Trimmer for Men
பரிசாக வழங்க மற்றொரு சிறந்த தேர்வு Syska HT3333K ஆண்களுக்கான ட்ரிம்மர். இது Flipkart ல் ரூபாய் 1,799/- கிடைக்கிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 60 நிமிடங்கள் வரை இயங்கக்கூடிய இந்த சாதனம் 2 வருட தயாரிப்பு வாரண்டியுடன் வருகிறது.
Fitness tracker: Realme Band
இதுவும் தந்தையர் தினத்துக்கு வழங்குவதற்கான ஒரு நல்ல பரிசு பொருள். ரூபாய் 1,499/- வரும் இந்த Realme Band பலவற்றை வழங்குகிறது. பெரிய கலர் டிஸ்ப்ளே மற்றும் real-time heart rate monitor, sports tracker, sleep quality monitor மற்றும் பல அம்சங்கள் இதில் உள்ளது. இன்கம்மிங் கால்கள் மற்றும் குறுஞ்செய்தி ஆகியவற்றையும் இது தெரிவிக்கும்.
Bluetooth speaker: Boat Stone Grenade
இந்த Bluetooth ஸ்பீக்கர் சிறியதாக இருந்தாலும் மிருதுவான ஆடியோவை சிறந்த bass உடன் வழங்குகிறது. 5W output உடன் கூடிய இந்த ஸ்பீக்கர் தற்போது ரூபாய் 1,449/- க்கு கிடைக்கிறது. 2 மணிநேரம் சார்ஜ் ஏற்றினால் இதன் பேட்டரி 7 மணி நேரம் நிலைத்து இருக்கும்.
உங்கள் தந்தை காப்பியை விரும்புபவராக இருந்தால் இந்த காப்பி தயாரிப்பு இயந்திரம் சிறந்த பரிசாக அமையும். ரூபாய் 2,170/- க்கு வரும் இந்த 700-watt இயந்திரத்துக்கு 2 வருட வாரண்டி உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil