நான் வாசிச்ச எல்லா செய்திகளையும் என் கணவர் கேசட்ல ரெக்கார்ட் பண்ணி வச்சுருப்பாரு: பாத்திமா பாபு எமோஷனல்

அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்ததும், நான் சாப்பிடுறதுக்கு முன்னாடி, பதிவு செய்யப்பட்ட அந்தச் செய்தியைப் பார்த்து, எப்படி வாசிச்சேன், இன்னும் என்னென்ன மேம்படுத்தலாம்னு நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து விவாதிப்போம்.

அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்ததும், நான் சாப்பிடுறதுக்கு முன்னாடி, பதிவு செய்யப்பட்ட அந்தச் செய்தியைப் பார்த்து, எப்படி வாசிச்சேன், இன்னும் என்னென்ன மேம்படுத்தலாம்னு நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து விவாதிப்போம்.

author-image
WebDesk
New Update
Fatima Babu Doordarshan News Reader

Fatima Babu Doordarshan News Reader

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இன்றும் பலரின் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக இருந்து வருகின்றன. அதில், செய்தி வாசிப்புக்கு என ஒரு தனிப் பங்கு உண்டு. அந்த வகையில், 1980கள் மற்றும் 90களில் தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராகப் பணிபுரிந்த பாத்திமா பாபுவை யாரும் மறந்திருக்க முடியாது. தனது தெளிவான உச்சரிப்பு, நேர்த்தியான தோற்றம், என செய்தி வாசிப்புக்கே ஒரு புதிய இலக்கணத்தை வகுத்தவர் அவர். தற்போது சினிமா மற்றும் தொலைக்காட்சியில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

Advertisment

சமீபத்தில் டிடி தமிழ் நியூஸ்க்கு அளித்த பேட்டியில் பாத்திமா பாபு அந்த பழைய ஞாபகங்களை நினைவுகூர்ந்தார். 



”அப்போதெல்லாம், தூர்தர்ஷன்ல ஒளிபரப்பாகுற செய்திகள் எல்லாம் நேரடி ஒளிபரப்பு (Live broadcast). ஒரு செய்தியை வாசிச்சு முடிச்சா, அதை நான் மறுபடியும் பார்க்க முடியாது. ஆனா, என் கணவர், நான் வாசிச்ச ஒவ்வொரு செய்தி அறிக்கையையும் விஎச்எஸ் (VHS) கேசட்டுகள்ல விடாமப் பதிவு பண்ணுவார். மத்தவங்க எல்லாம் சினிமா கேசட்டுகளைச் சேகரிக்கும்போது, என் கணவரோட முழு சேகரிப்பும் நான் வாசிச்ச செய்திகள்தான்!

அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்ததும், நான் சாப்பிடுறதுக்கு முன்னாடி, பதிவு செய்யப்பட்ட அந்தச் செய்தியைப் பார்த்து, எப்படி வாசிச்சேன், இன்னும் என்னென்ன மேம்படுத்தலாம்னு நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து விவாதிப்போம். வீட்டு வேலைகள்ல இருந்து சமையல் வரைக்கும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் போறது வரை எல்லாமே நான்தான்.

Advertisment
Advertisements

என் கணவர் எனக்காக அவரோட பைக்கோட காத்துக்கிட்டு இருப்பாரு. நாங்க வீட்டுக்குத் திரும்பும் வழியில, ஆயிரம் விளக்குல ஒரு தர்ஹா பக்கத்துல பூ விற்குறவங்க இருப்பாங்க. அங்க வண்டியை நிறுத்தி, 5 ரூபாய்க்கு ஒரு முழம் மல்லிகைப் பூ வாங்கி, தலைநிறைய இருக்க மாதிரி பண்ணிப்போம். இன்னைக்கு அந்த சாலைய தாண்டி வரும்போது இந்த நினைவுகள் எல்லாம் அப்படியே மனசுக்குள்ள இருக்கு”, என்று பாத்திமா பாபு அந்த வீடியோவில் கூறினார்.

ஒரு பெண் தன் வாழ்வில் வெற்றிபெற, கணவரின் ஆதரவு எவ்வளவு முக்கியம் என்பதை அவரது அனுபவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: