Chennai: சென்னை கீழ்ப்பாக்கம் நியூஆவடி சாலை பகுதியைச் சேர்ந்த அன்விதா, தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். உடற்பயிற்சிக் கூடத்துக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இவர் கடந்த புதன்கிழமை வழக்கம் போல் உடற்பயிற்சிக் கூடத்திற்கு சென்றபோது, அங்கு மயக்கம் அடைந்துள்ளார்.
அப்போது, அதே கூடத்தில் பயிற்சி செய்து கொண்டிருந்த மருத்துவர் ஒருவர், முதலுதவி சிகிச்சை அளித்து தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், சிகிச்சை பலனலிக்காமல் அவர் உயிரிழந்தார்.
இதனிடையே, ஒருவர் ஆரோக்கியமாக இருந்தாலும், மனதளவில் அழுத்தத்துடன் இருந்தால் மாரடைப்பு வரலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலும், ரத்தக் குழாய்களில் பாதிப்பு இல்லாத அளவுக்கு அடைப்புகள் இருந்து, அதிக எடைகொண்ட பொருட்களை தூக்கும்போதும், அதிதீவிரமாக உடற்பயிற்சி மேற்கொள்ளும்போதும், மூளைக்கு ரத்தம் போகமால் மயங்குவதற்கும், மாரடைப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“