கன்னியாகுமரி டூ காஷ்மீர்: பைக்கில் பெண் துறவி பயணம்
கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்கு ஆத்ம சித்தர் லெட்சுமி அம்மா இருச்சக்கர வாகனத்தில் ஆன்மீக சுற்றுப்பயணம் தொடங்கினார். இப்பயணத்தை திரைப்பட இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் சனிக்கிழமை தொடக்கி வைத்தார்.

Advertisment
ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆத்ம சித்தர் லெட்சுமி அம்மா. சமூக ஆர்வலரான இவர் முதியோர்களுக்கு இருப்பிடம், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி, ஏழை, எளிய மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி உதவி ஆகியவற்றை வலியுறுத்தியும், அதற்காக நிதி திரட்டும் வகையிலும் தனது ஆன்மீக பைக் பிரசார பயணத்தை தொடங்கினார். பல்வேறு மாநிலங்கள் வழியாக இருமாதங்களில் ஆன்மீக பயணத்தை முடிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
தொடக்க நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்டம் ரஸ்தாகாடு காயவேம்புபதி நிர்வாகக்குழுத் தலைவர் என்.ராமசாமி, செயலர் என்.இளையபெருமாள் வடக்குத்தாமரைகுளம் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் என்.பார்த்தசாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Advertisment
Advertisements
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil