/indian-express-tamil/media/media_files/2025/10/13/fensi-2025-10-13-17-09-56.jpg)
சீனப் பாரம்பரியத்தின் ஒரு பகுதியான ஃபெங் ஷுய் (Feng Shui) தத்துவம், நேர்மறை சக்திகளை ஈர்க்கும் ஒரு வழியாகக் கையாளப்படுகிறது. இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 'ஃபெங் ஷுய் பிரேஸ்லெட்'கள் (Feng Shui Bracelets) தற்போது உலகளவில் பிரபலமடைந்துள்ளன. அதை விதிமுறைகளைப் பின்பற்றி அணிந்துகொள்ளும்போது, அதிசயிக்கத்தக்க பல நேர்மறை விளைவுகள் உங்கள் வாழ்க்கையில் உண்டாகும். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பிக்ஸிவு (Pixiu)
செல்வத்தைக் குவிக்கவும், கெட்ட ஆவிகளிடமிருந்து பாதுகாப்பளிக்கவும், சிறந்ததோர் எதிர்காலம் அமைய உதவக்கூடிய ஒரு பயங்கரமான மிருகத்தின் உருவம். இது சீனர்களால் உருவாக்கப்பட்ட புராணகாலப் படைப்பாகும்.
பிளாக் ஆப்ஸிடியன் (Black Obsidian)
இது அடர் கருப்பு நிற எரிமலைக் கண்ணாடியாகும். எதிர்மறை சக்திகளையும், மன அழுத்தத்தையும் குறைக்க வல்லது.
டைகர் ஐ (Tiger's Eye)
சிட்ரின் மற்றும் க்ரீன் ஜேட்: பிசினஸ் செழிக்க, வெற்றி குவிய, சந்தோஷம் நிலைக்க, படைப்பாற்றல் பெருகவென பல நன்மைகளை அளவின்றி அளிக்க வல்லவை இவை.
சீன நாணயங்கள்
இவை அதிர்ஷ்டத்தை வரவழைக்க உதவுபவை. ஃபெங் ஷுய் சாஸ்திரத்தில் இடது கை, சக்தியை உள்வாங்கும் கையாக கருதப்படுகிறது. இதனால், ஃபெங் ஷுய் பிரேஸ்லெட்டை இடது கையில் அணிவதே நன்மை தரக் கூடியது. ஃபெங் ஷுய் பிரேஸ்லெட்டை வாங்கி வந்து, அதை உப்பு நீரில் முக்கி சுத்தப்படுத்திய பின், முழு நிலவு தோன்றும் நாளில் நிலா வெளிச்சத்தில் காட்டி பிறகு அணிந்து கொள்வது நல்லது. அதிகாலை நேரத்தில் அல்லது மெடிடேஷன் செய்த பின் இதை கையில் அணியலாம்.
தூங்கும்போது, குளிக்கும் போது மற்றும் ரொமான்டிக் மூடில் இருக்கும்போதும் இந்த பிரேஸ்லெட்டை கழற்றி விடுவது நலம். மீறி அணிவோமானால், அது தன் சக்தியை இழந்துவிடும். பிக்ஸிவு பிரேஸ்லெட்டை, அதன் முகம் வெளிப்பக்கம் இருக்கும்படி அணிய வேண்டும். மெல்லிய துணியால் இரண்டு மூன்று தினங்களுக்கு ஒருமுறை துடைப்பது அவசியம். இந்த பிரேஸ்லெட்டை பாத்ரூமிலோ அல்லது தலையணைக்கு அடியிலோ கழற்றி வைக்கக் கூடாது.
பிக்ஸிவு பிரேஸ்லெட்டை உங்களைத் தவிர வேறு எவரையும் அணிய அனுமதிக்காதீர்கள். நீங்கள் கோபமாகவோ, வெறுப்புற்ற மன நிலையில் இருக்கும்போதோ பிக்ஸிவு பிரேஸ்லெட் அணிந்திருப்பதைத் தவிர்த்து விடுங்கள். ஃபெங் ஷுய் பிரேஸ்லெட் உங்களுக்கு மிகுந்த தன்னம்பிக்கையளித்து, உங்கள் வாழ்க்கையையே சிறந்த முறையில் மாற்றியமைக்கக்கூடிய திறனுடையது என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.